தீவிரவாத செயலுக்கு வழிவகுக்கும் 3000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கேரளா அருகே கைப்பற்றியது கடற்படை.!

0
Follow on Google News

சமீப காலமாக கேரள கடல் வழியில் குறிப்பாக லட்சத்தீவு கேரளா இடையேயான கடல்பரப்பில் கைபற்றபட்ட போதைபொருளின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடியினை நெருங்குகின்றது, கேரளாவில் தங்க கடத்தல் ஒரு பக்கம் , போதை பொருள் கடத்தல் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது, அரேபியாவில் இருந்து தங்கம், ஆப்கனில் இருந்து போதைபொருள் என சட்டவிரோத செயல்கள் நடக்கும் ஒரு அபாயபகுதியாக கேரளா இருந்து வருகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

லட்சகணக்கான கோடிகள் மதிப்புள்ள போதை பொருட்களும், தங்கமும் மிக எளிதாக கேரளாவில் பிடிபடுவது எந்த அளவு சமூக விரோத சக்திகளின் கட்டுபாட்டில் அந்த மாநிலம் இருக்கின்றது என்பதை உணரமுடிகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர், தற்போது உள்ள ஆளுநர் பதவிக்கு வந்த பின்பு தான் கேரளாவில் நடந்து வரும் கடத்தல்கள் வெளி உலகுக்கு தெரியவருகிறது என்கின்றனர் கேரள மக்கள்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினகளுக்கு முன் ,இந்திய கடற்படை கப்பல் சுவர்ணா, அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகிக்கும் வகையில் சென்றுக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டது. அப்போது அந்த படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேல் விசாரணைக்காக, அந்தப் படகு அருகில் உள்ள கேரளாவின் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிடிபட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 3000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவு மற்றும் விலை மதிப்புள்ள பறிமுதல் நடவடிக்கை மட்டுமல்ல. மக்ராவ் கடற்கரையிலிருந்து இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி செல்லும் சட்டவிரோத வழிதடத்தை சீர்குலைக்கும் செயலிலும் இது மிகப் பெரிய நடவடிக்கையாகும். போதைப் பொருட்களால் மனிதர்களுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், போதைப் பொருட்களின் வர்த்தகம், தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் குற்றநடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.