மிச்சர் சாப்பிடும் PTR.! ஸ்டாலின் மானத்தை காப்பாற்ற பிகாரில் இருந்து ஆட்களை இறக்கிய பிரசாந்த் கிஷோர்.!

0
Follow on Google News

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113 வது குருபூஜை இன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று அரசியல் கட்சிகள் மரியாதை செய்து வருகின்றனர், அந்த வகையில் பசும்பொன் செல்வதற்காக நேற்றே சென்னையில் இருந்து மதுரை வந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு பசும்பொன் புறப்பட்டார்.

இந்நிலையில் இந்து மதத்தை தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தலைமை தாங்கி வழிநடத்தும் முக ஸ்டாலின், தெய்வ திருமகனார் பசும்பொன் நினைவிடத்துக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் GoBackStalin என்ற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரென்ட் செய்யப்பட்டது, அதில் ஸ்டாலின் இந்துக்கள் மனம் புண்படும்படி பேசியது, மற்றும் தேவர் வாழ்ந்த காலத்தில் இந்து எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் குறிப்பிடப்பட்டு GoBackStalin என்ற ஹாஸ்டக் ட்ரென்ட் செய்யப்பட்டது.

இது ஸ்டாலினுக்கு மிக பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களில் திமுக ஐடி விங்கை மிகப்பெரிய கட்டமைப்பாக உருவாக்கி வைத்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் PTR தியாகராஜன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என திமுகவினர் கொந்தளித்து போய் உள்ளனர், சில முக்கிய தலைவர்கள் PTR தியாகராஜன் மிச்சர் சாப்பிடுகிறாரா என்று கோவப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு மேல் அமெரிக்க தம்பி PTR தியாகராஜனை நம்பி பிரேசனம் இல்லை என உணர்ந்த திமுக தலைமை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரை தொடர்பு கொண்டு எதாவது செய்து மானத்தை காப்பாற்றுங்கள் என முறையிட்டுள்ளனர், இதனை தொடர்ந்து பிகாரில் உள்ள ஐபெக் ஊழியர்களை வைத்து TNWithStalin என்ற ஹாஸ்டக் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அந்த ஹாஸ்டக் பீகாரில் மாநில அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இதை கிண்டல் செய்யும் விதமாக BiharWithStalin என்ற ஹாஸ்டக் தமிழக்தில் ட்ரென்ட் செய்யப்பட்டு வருவது மேலும் திமுகவை கதிகலங்க வைத்துள்ளது, இதனை தொடர்ந்து திமுக ஐடி விங் செயலாளர் PTR தியாகராஜனை நீக்கிவிட்டு, தற்பெருமை பேசாத திறமையான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.