தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கு நடைபெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நேற்று புதுச்சேரி மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் மக்கள் நீதி மையம் தலைமை கமலஹாசன். பிரச்சாரம் செய்யக்கூடிய மைக் வேலை செய்யாததால் கோபத்தில் தனது சின்னத்தை தூக்கி எறிந்தார் கமலஹாசன்.
தமிழகத்தின் முக்கிய இரண்டு கட்சி தலைவர்கள் இருக்கும் வரை மானம் காத்த நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு இறப்புக்கு பிறகு அரசியல் ஆசையால் கட்சி தொடங்கினார். நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே பிரபலமானவர் மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக அரசியலை விமர்சித்து வந்தார். சமூக வலைத்தளத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் சமூக கருத்துக்களை தமிழில் பகிர்ந்து வருவர். இவரது பதிவு எளிதாக யாருக்கும் புரியாது.
கட்சி தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்று நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளினார். தற்போது தமிழக மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி இடுகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் அரியணையில் அமர வேண்டும் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கமலஹாசன்.
கமல்ஹாசன் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும்போது மைக் வேலை செய்யவில்லை ஆத்திரமடைந்த கமல் தங்களது கட்சி சின்னம் டார்ச் லைட்டை மக்களுக்கு தூக்கி காட்டி இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு கோவத்துடன் இந்த டார்ச் லைட்டை பிரச்சார வாகனத்தில் அமர்ந்த பணியாளர் மீது வீசினார். சும்மா சொல்லக்கூடாதுபா கமலு கோபக்காரர் போல மக்கள் முணுமுணுத்தனர்.