ஊக்கமளிக்கும் முன்னேற்றமாக, நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு 26 நாட்களுக்குப்பிறகு, மூன்று லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாராந்திர பாதிப்பு வீதமும் 18.17 சதவீமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,73,515 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 31,64,23,658 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் இன்று கொவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,74,076- ஆக உள்ளது. தேசிய குணமடையும் விகிதம் 84.81 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,78,741 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகம். கடந்த ஒரு வாரத்தில் 6வது முறையாகவும், கடந்த 4 நாட்களில் தொடர்ச்சியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 71.35 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்றொரு புறம், நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 35,16,997 ஆக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 14.09 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 1,01,461ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களில் 75.04 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
நாடு முழுவதும் 3வது கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. இதுவரை போடப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 18.30 கோடியை எட்டியுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 26,68,895 அமர்வுகள் மூலம், 18,29,26,460 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 18 முதல் 44 வயது வரையிலான 4,35,138 பயனாளிகள் முதல் டோஸ் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். 3வது கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது முதல், நாடு முழுவதும் 33 மாநிலங்கள்/யூனியன் பிரசேதங்களில் 52,64,073 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் 32,645 பேர் கொவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்பில் 75.95 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 34,389 ஆக உள்ளது. அடுத்ததாக தமிழகத்தில் 33,181பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய உயிரிழப்பு வீதம் தற்போது 1.10 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர்.