நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில தினகளுக்கு முன், திமுக தலைவர் முக ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர், மேலும் சபரீசன் நெருங்கிய நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது,பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த சோதனை நடைபெற்ற போது தமிழகம் முழுவதும் இது பரபரப்பாக பேசப்பட்டது.
இறுதியில் சோதனை முடிவில் எந்த ஒரு முக்கிய ஆவணமும் சிக்கவில்லை என தகவல் வெளியானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர், மேலும் இந்த சோதனை குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முக ஸ்டாலின், நங்கள் மிசாவை பார்த்தவர்கள் வருமான வரித்துறை சோதனைக்கு பயப்பட மாட்டோம் என்றும், உதயநிதி ஸ்டலின் பேசிய போது தைரியம் இருந்த என்னுடைய வீட்டுக்கு சோதனை செய்ய வாங்க என சவால் விடுத்தார்.
சபரீசன் வீட்டில் இருந்து எந்த ஒரு ஆவணமும் கைப்பற்றவில்லை என செய்திகள் வெளியான நிலையில், சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகார சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார், அதில் வெளிநாடுகளில் சபரீசன் தொடர்புகள் பற்றிய ஆவணங்கள், இதில் குறிப்பாக துபாயில் இருந்து சபரீசனுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ள ஆதாரத்தையம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
இதனை தொடர்ந்து இந்த அறிக்கையை மத்திய வருவாய் துறை செயலாளர் ஒரு ரகசிய குறிப்பு எழுதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார், இதனை தொடர்ந்து உள்த்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு, வெளிநாடுகளில் சபரீசன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு தகவல் சென்றுள்ளதை தொடர்ந்து உடனே உள்த்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறபடுகிறது.
பண மதிப்பு இழப்பீட்டின் போது சுமார் 900 கோடிக்கு மேல் வெளிநாடுகளில் உள்ள சில நிறுவனத்துடன் பண பரிமாற்றம் செய்ததாக சபரீசன் குறித்த முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சபரீசன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து தேர்தல் முடிவுக்கு பின்பு தான் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகளை பொருத்து இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும், மேலும் இதில் சிக்கியுள்ள ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களை சிறையில் தள்ள உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.