தீபாவளி வாழ்த்து தெரிவித்தால் சமூகநீதி கேட்டு போய் விடுமா.? திமுக எம்பிக்கு தரமான பதிலடி கொடுத்த பிரபலம்..

0
Follow on Google News

தீபாவளி பண்டிகைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது, இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுவரை வாழ்த்து தெரிவித்தது கிடையாது, எதிர்கட்சி தலைவராக இருந்த போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பின் அது தனது அட்மின் பதிவு செய்தது என விளக்கம் அளித்தார்.

ஆனால் தற்போது தமிழக முதல்வராக அணைத்து மக்களுக்குமான முதல் அமைச்சர் என்கிற முறையில் பிற மதத்துக்கு வாழ்த்து சொல்வது போது இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என பலர் முதல்வரை வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் முதல்வராக இருப்பதால் இந்த முறை உறுதியாக தீபாவளி வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்ப்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தமிழக முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காதது குறித்து, பிரபல அரசியல் விமசகர் சுமந்த சி ராமன்,தனது சமூக வலைதள பக்கத்தில், தீபாவளி பண்டிகை ஹிந்து மதத்தை சார்ந்த பெரும்பாலானோறால் கொண்டாடப்படுகிறது. ஒரு கட்சி தலைவர் வாழ்த்து தெரிவிப்பது அவர் விருப்பம். முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பது அவர் கடமை. பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவிக்கிறார் என்றும்,

ஆனால் பெரும்பாலும் ஹிந்து மக்கள் வாழும் மாநிலத்தின் முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அநேகமாக வாழ்த்து தெரிவிக்காத ஒரே முதல்வர் முக ஸ்டாலின் தான். என் எதிர்பார்ப்பு இந்த முறை எல்லோரையும் அரவணைக்கும் ஒரு ஆட்சி திமுக வழங்கும் என்று. அவ்வாறு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என சுமந்த் சி ராமன் தெரிவித்திருந்தார், இதற்கு பதில் தரும் விதத்தில் தர்மபுரி திமுக எம்பி செந்திகுமார்,

போய் வேலையை பாருங்க சார், திமுக இப்படி தான் 1967 அரசு அமைத்ததில் இருந்து திரவிட கொள்கை மற்றும் சித்தாந்ததுடன் பகுத்தறிவு சார்ந்த மக்கள் நலதிட்டதை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு செயல்படுத்தி கொண்டே இருக்கிறது என பதிலளித்திருந்தார் இதற்கு சுமந்த் சி ராமன், சூப்பர் சார், வாழ்த்து தெரிவிப்பதால் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு கேட்டு போய் விடுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.