நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது, இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை அறிவித்த அதே தேதியில் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என குழப்பம் நீடித்து வரும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என உறுதியான தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மற்றும் தனக்கு நெருக்கமான சில முக்கிய புள்ளிகளிடம் இருந்து வந்த தகவலை தொடர்ந்து வரும் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு,அடுத்து 4, 5 தேதிகளில் அஷ்டமி, நவமி வருவதால், மே 6ம் தேதி முதல்வராக பதவி ஏற்கலாம் என ஸ்டாலின் குடும்பத்தினர் தேதி குறித்துள்ளார் மேலும் முக ஸ்டாலின் மந்திரிசபை பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர்களில் முக்கியமான இலாகாவான நிதி துறையை குறிவைத்துள்ளார் திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் PTR பழனிவேல் தியாகராஜன், இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நிதி குறித்த விவாதக்களில் கலந்து கொண்டு உலக பொருளாதாரம் குறித்து அதிகம் பேசி வருகின்றவர், இதற்கு காரணம் திமுக ஆட்சி அமைத்தால் நிதி அமைச்சராவதற்கு அப்போது இருந்தே தன்னை முன்னிலை படுத்தி வந்துள்ளார்.
கடந்த காலங்களில் திமுக ஐடி பிரிவை கூட சரியாக வழிநடத்த முடியாமல், ஸ்டாலின் மிசா கைது, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது குறித்து தொடர்ந்து திமுகவுக்கு எதிராக வந்த சர்ச்சைகளை திமுக ஐடி பிரிவு முறையாக கையாண்டு தக்க பதிலடி கொடுக்க முடியாமல் திமுக தலைவர் மற்றும் திமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது, இதன் பின்புதான் இனி PTR தியாகராஜன் சரிப்பட்டு வரமாட்டார் என முடிவு செய்து ஐ-பேக் நிறுவன கட்டுப்பாட்டில் ஐடி பிரிவை ஒப்படைத்தது திமுக தலைமை.
இந்நிலையில் ஸ்டாலின் தயாரித்த திமுக அமைச்சரவை பட்டியலில் நிதி அமைச்சராக திமுக மூத்த தலைவர் பொன்முடி பெயர் இடம்பெற்றுள்ளது, இந்த தகவல் அறிந்த PTR தியாகராஜன் நிதி துறையை கைப்பற்ற முயற்சி செய்துள்ளார், ஆனால் திமுக தலைமை அதுக்கெல்லாம் அந்த தம்பி சரிப்பட்டு வரமாட்டர், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக அவர் இருக்கட்டும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.