இந்த உண்மை தெரிந்தால் யாரும் பிரபாகரனை ஆதரிக்க மாட்டார்கள்..! மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அனல் பறக்கும் பேச்சு..

0
Follow on Google News

நேற்று விடுதலை புலி இயக்க தலைவன் பிரபாகரன் பிறந்ததினம், ஒரு சில அமைப்பினர் அனுசரித்து வந்தனர். அதே வேலையில் மறைந்த பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் 1990 களில் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது. இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

மனிதாபிமானம் உடைய, அரசியல் உடைய, நெறி உடைய, பண்பு உடைய, தமிழறிந்த, தமிழ் நாகரீகம் அறிந்த ஒருவரும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது. உயிருக்கு பயந்து கொன்று விடுவார்களோ என்று ஆதரிப்பவர்கள் தான், அப்படிப்பட்டவர்கள் பயத்தினால் தருகின்ற ஆதரவு விடுதலைப்புலிகளுக்கு எப்படி பலனளிக்கும், அவர்களுக்கு தேசம் இல்லை, அவர்களுக்கு இனம் இல்லை, அவர்களுக்கு மொழி இல்லை, அவர்களுக்கு தாய் இல்லை,

அவர்களுக்கு தகப்பன் இல்லை, இப்படி ஒரு கொள்கை, இப்படி ஒரு கோட்பாடு, இப்படி ஒரு கூட்டத்திற்கு நமது இளைஞர் சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்து பலியாவதும் இதில் எது பெருமை தக்க விஷயம் என்றால், பத்மநாபாவின் மரணம் பெருமை தக்கது. யாரையாவது சாகடிப்பது என்கின்ற அரசியல் இது உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது, இது உலக மானிட நேயத்திற்கு சவால் விடுகிறது.

இது உலக சகோதரத்துவம் சவால் விடுகிறது, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் அன்பிற்கு சவால் விடுகிறது ஒரு கையால் பிடித்து விடக்கூடிய ஒரு கூட்டம் ஆயுதத்தையும் சில அன்னிய உதவிகளையும் வைத்துக்கொண்டு ஒரு தேசத்தை சுடுகாடு ஆக்குவது என தீர்மானித்து விட்டார்கள். இவர்கள் தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை, ஈழத்தமிழர்களுக்கும் நண்பர்கள் இல்லை, இந்தியாவுக்கும் நண்பர்கள் இல்லை,

இலங்கைக்கும் நண்பர்கள் இல்லை தமக்கே நண்பர்களில் இல்லை அவர்கள் என எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபாகரன் பிறந்த தினத்தை ஒரு தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்து பிரபாகரனுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடதக்கது.