பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும். புலிக்குட்டியா பிறக்கும்.! ஸ்டாலினை வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி.!

0
Follow on Google News

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கருணாநிதி கடன்பட்ட நேரத்தில் புரட்சித்தலைவர் படத்தில் நடித்து உதவி செய்தார்.திருவாரூரிலிருந்து ஒன்றுமில்லாமல் வந்த கருணாநிதி குடும்பத்திற்கு இன்று இத்தனை சொத்துக்கள் எப்படி வந்தது.

ஊழல் கட்சி என்றால் தி.மு.க. தான். ஊழல் நாயகன் என்றால் அது ஸ்டாலின் தான். என்ன தைரியத்தில் கழகத்தையும், அமைச்சர் குறித்தும் தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். தொண்டாமுத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலேயே ஸ்டாலினுக்கு வேலை இல்லை. கிராம சபை கூட்டத்தின்போது கேள்வி கேட்ட பெண்ணை விரட்டியடித்ததால் ஸ்டாலினுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது. ஆகவே தான் தெரியாமல் தொண்டாமுத்தூரில் வந்து பேசி மாட்டிக்கொண்டார். திருநள்ளாறு சென்று ஸ்டாலின் சாமி கும்பிடுவதே நல்லது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விடமாட்டோம் என்று ஸ்டாலின் பேசியதால் தமிழக மக்கள் திமுகவை இனி எப்போதும் ஆட்சியில் அமர விட மாட்டார்கள்.

இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் தான் காரணம். இதை மக்கள் மறந்துவிட வில்லை. கட்டுக்கோப்பான தொகுதியாக விளங்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் வந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின். எந்த ஊருக்கு போகிறேன் என்று தெரியாமல் எந்த ஊர்? எந்த ஊர்? என்று கேட்கிறார். ஸ்டாலினே நீங்கள் எங்கேயும் பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களை பார்த்து தமிழக மக்களே சிரிக்கிறார்கள். எழுதி கொடுப்பதை படிக்கும் ஸ்டாலின் அப்படி எழுதிக் கொடுத்தது உண்மையா பொய்யா என்று கூட பார்க்க மாட்டீர்களா?

பெண்களை இழிவுபடுத்திப் பேசியவர் கருணாநிதி. பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும். புலிக்குட்டியா பிறக்கும். ஆகவேதான் கருணாநிதிக்கு பிறந்த மகன் ஸ்டாலின் கேள்வி கேட்ட பெண்ணை இழிவு படுத்தியுள்ளார். அரசு செயல்படவில்லை என்று பேசும் ஸ்டாலின் உங்கள் கட்சியை செயல்பட வைக்க சொந்த மூளை இல்லாமல் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்தது ஏன்? அவதூறு பரப்பி குற்றம் சொல்லியே பெயர் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் ஸ்டாலின். கருணாநிதி கொள்ளை அடித்த பணத்திலேயே வளர்ந்து ஒரு அரண்மனையிலேயே வளர்ந்து ராஜ வாழ்க்கை வாழும் ஸ்டாலின் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பேசுகிறார்.

கழகத்தை அழிக்க நினைக்கும் திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலோடு துரத்தி விட வேண்டும். தமிழக மக்களையும், சிறுபான்மையினரையும் திமுக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் சிறுபான்மையினருக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப்படிப்பு படிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆகவே கழக ஆட்சி மூன்றாவது முறையாக தொடர்ந்து அமைய வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .