என் மீது நடவடிக்கை எடுத்தால் திமுகவில் இணைந்து விடுவேன்.! கே.எஸ்.அழகிரிக்கு மிரட்டல் விடுத்த ஜோதிமணி.!

0
Follow on Google News

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அதே போன்று இம்முறையும் அதே தொகுதியை பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது ஆனால் இறுதில் 25 தொகுதிகள் மட்டும் கிடைத்தது. இந்த 25 தொகுதியை பெறுவதர்க்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுத்த சம்பவம் கூட நடந்தது.

திமுகவிடம் இருந்து போராடி பெற்ற அந்த 25 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியினர் பிரித்து கொள்வதில் பெரும் கடும் போட்டி நடந்துள்ளது, இதில் ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பல கோஷ்டிகள் இருக்கும் நிலையில், தற்போது கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஒரு கோஷ்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது, இதில் தனது ஆதரவாளர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி உள்ளார் ஜோதிமணி.

இதற்கு யாரும் செவி சாய்க்க வில்லை, இதனை தொடர்ந்து ஜோதிமணி தனது கோவத்தை வெளிப்படுத்தினர், அதில் தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம் என கடுமையாக தமிழக காங்கிரஸ் தலைமையை சாட்டினார்.

ஜோதிமணியின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில், கே.எஸ். அழகிரியின் தீவிர ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோபண்ணா கூறுகையில், வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக கருத்துக்களை பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா ? 2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ? கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி.

மேலும் ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக ஜோதிமணி மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கையில் இறங்கியது, இந்த தகவல் ஜோதிமணிக்கு தெரிய படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய ஜோதிமணி, என் மீது தேர்தல் முடிந்ததும், நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. நான் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டாலும் என்னை வெற்றி பெற வைத்தது திமுக, அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ, செந்தில் பாலாஜி முக்கிய கரணம். என் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் எனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்து விடுவேன், எனக்காக என்னை சுற்றி இங்கே கரூரில் இருப்பவர் பெரும்பாலும் திமுக நிர்வாகிகள் தான் என அந்த காங்கிரஸ் முக்கிய பிரமுகரிடம் கே.எஸ்.அழகிரி பெயரை குறிப்பிட்டு ஜோதிமணி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.