கரையைக் கடக்கும் டவ்-தே புயல்… எதிர்கொள்ள இந்திய விமானப் படை ஆயத்தம்..

0
Follow on Google News

இந்திய வானியல் துறையின் தேசிய காலநிலை முன்னெச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி, டவ்-தே புயலானது கிழக்கு மத்திய அரபிக் கடலில் மிக அதி தீவிரப் புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிர சூறாவளிப் புயலாக மாறியுள்ளது.

இந்த புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை குஜராத் கடற்கரையைச் சென்றடையும். பின்னர் குஜராத்திற்கும் போர்பந்தருக்கும் இடையேயான மஹுவா பகுதியில் (பாவ்நகர் மாவட்டம்) இரவு (8 – 8.30PM) மணி அளவில் கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசத் தொடங்கி அதிகபட்சமாக 185 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் குஜராத் மற்றும் டையு கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டவ்-தே புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளுக்காக, மே 16 அன்று, தேசிய பேரிடர் நிவாரணப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) 167 பணியாளர்களையும், 16.5 டன் நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு, இரண்டு சி-130ஜே மற்றும் ஒரு ஆன்-32 இரக விமானங்கள், கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு சென்றுள்ளன. அன்-32 விமானம் இப்போது அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு சி-130ஜே மற்றும் இரண்டு ஆன்-32 விமானங்களும். 121 என்.டி.ஆர்.எஃப் பணியாளர்களையும் 11.6 டன் நிவாரணப் பொருட்களையும் விஜயவாடாவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றன. மேலும், 2 சி-130ஜே விமானம், 110 பணியாளர்களையும், 15 டன் சரக்குகளையும் என்.டி.ஆர்.எஃப்-க்கு புனேவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றது.