மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூட கோவிலைச் சேர்ந்தவர் கிளிமுத்து இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. காளிமுத்துவுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் சண்டை போடுவது வேலையாக கொண்டுவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளிமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருக்கும் அவரது குழந்தைகளை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளார். குழந்தைகள் எங்கு செல்வதென்று தெரியாமல் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது வேலைக்கு சென்ற தமிழ்ச்செல்வி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த குழந்தைகளிடம் நடந்ததை கேட்ட போது தந்தை குடித்துவிட்டு வந்து தங்களை அடித்து வீட்டை விட்டு துரத்தியதை தாய் தமிழ்ச்செல்வி கூறினார்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தமிழ்ச்செல்வி வீட்டிற்குச் சென்று கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குடிபோதையில் இருந்து மீளாத கிளிமுத்து மனைவி தமிழ்ச்செல்வி இடமும் சண்டையிட்டு வீட்டை விட்டு துரத்தி உள்ளார். கணவரின் இந்த அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் அருகிலிருந்த கம்பை எடுத்து விளாசி எடுத்துள்ளார்.
இதில் கிளி முத்து அடி தாங்காமல் திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். மேலும் ஆத்திரத்தை கட்டுப் படுத்த முடியாமல் தமிழ்ச்செல்வி வீட்டு அருகில் இருந்த கல்லை எடுத்து கணவன் கிளி முத்து தலையில் போட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தலையில் பலத்த காயமடைந்த கிளி முத்துவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கணவனை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கூடக்கோவில் போலீசார் தமிழ்ச்செல்வி கைது செய்தது விசாரித்து வருகின்றனர். கணவனை மனைவி கொள்ளும் என்று இந்த சம்பவம் கூட கோவில் பகுதியில் பெரும் பரபரப்பாகியுள்ளது.