நாளை (ஏப்ரல் 14) தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. உலக முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாட உள்ளனர். தமிழ் புத்தாண்டு வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் அந்த முதல்நாள் மங்களகரமாக அமைய வேண்டும். சித்திரை கனி காணும் இதன்மூலம் அந்த நாள் மங்களகரமாக அமையும். சித்திரை கனி எப்படிக் காணுவது எப்படி வாங்க பாக்கலாம்.
தமிழ்புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு உங்கள் வீட்டை மொழிகி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையிலே அல்லது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு பார்த்து கண்ணாடி ஒன்று வைக்கவும். அதான் அருகில் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகளை (மா, பலா, வாழை) வைக்கவும். மா பலா கிடைக்காதவர்கள் வேறு பழங்களை வைத்துக் கொள்ளலாம். மற்றும் அதன் அருகில் வாழை இலையில் ஒரு எலுமிச்சை பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெள்ளி மற்றும் தங்க நகைகள், காசு சில்லரையாகவோ பணமாகவோ வைக்கவும்.
கண்ணாடி முன்பு இவ்வனைத்தையும் வைத்து விட வேண்டும். கண்ணாடியைப் பார்த்தல் அதான் முன்னாடி வைத்து இருந்த பொருட்கள் அனைத்தும் தெரியும் படி வைத்து விட வேண்டும். காலையில் தமிழ் புத்தாண்டு அன்று தூங்கி எழுந்தவுடன் நீங்கள் கண்ணைத் திறக்காமல் நேரக் நீங்கள் வைத்திருக்கும் கண்ணாடி முன்பு சென்று கண்ணைத் திறந்து கண்ணாடியில் முகத்தைப் பார்க்கவும். அதில் காசு, நகை, பழங்கள் என்று எல்லாம் தெரியும்.
அனைத்தையும் மனதார நினைத்து வழிபட வேண்டும். உங்க குடும்ப உறுப்பினர்களையும் எழுப்பி சித்திரைக்கனி பார்க்க வைப்பதன் மூலம் வீட்டில் செல்வங்கள் குவியும் வளமான வாழ்க்கையை நம்மால் பெற முடியும் என்று ஒரு நம்பிக்கை. இதான் பிறகு நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையில் உங்கள் ஈஷ்ட தெய்வங்களை வழிபடலாம். இந்தத் தமிழ் வருடப்பிறப்பு அனைவருக்கும் மங்களகரமான வருடமாக அமைய தின சேவல் நியூஸ் சார்பாக தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.