அதிரடியாக ரூ.200 கோடி வசூல் வேட்டை…மற்றவர்களை பின்னுக்கு தள்ளி முக ஸ்டாலினின் செல்ல பிள்ளையாக செந்தில் பாலாஜி மாறியது எப்படி.?

0
Follow on Google News

2011ம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அமைச்சரவையில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பல்வேறு ஊழல் குற்றசாட்டு காரணமாக அவரது அமைச்சர் பதவியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2015ம் ஆண்டு பறித்தார், இதன் பின் நடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறவன்குறிஞ்சி சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரை தொடர்ந்து அறவன்குறிஞ்சி சட்டமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதன் பின் மீண்டும் நடைபெற்ற அறவன்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார், ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இருந்த செந்திபாலாஜி சட்டமன்ற உறுப்பினர் பதவி பறி போனதை தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்தவர், திமுகவில் தன்னை இணைத்து கொண்டார், திமுகவில் இனைந்த குறுகிய காலத்தில் அவருக்கு கரூர் திமுக மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது திமுக மூத்த தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது.

இதன் பின் நடைபெற்ற அறவன்குறிஞ்சி இடைதேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மத்தியில் கரூர் மாவட்ட திமுக அரசியலில் முக்கிய நபராக உருவெடுத்தார், ஒரு கட்டத்தில் கரூர் மாவட்ட அரசியலில் செந்தில் பாலாஜி என்ன சொல்கிறாரா அது சரியாக தான் இருக்கும் என்கிற நிலைக்கு வந்தது திமுக தலைமை.

இந்நிலையில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு திமுக அமைச்சரவையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். திமுகவில், கே என் நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் இருக்கையில் அதி முக்கிய துறையான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை செந்திபாலாஜிக்கு வழங்கியது தமிழக அரசியலில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் பேசுகையில் தேர்தலுக்கு முன்பு தேர்தல் செலவுக்காக சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து திமுக தலைவரிடம் செந்திபாலாஜி கொடுத்ததாகவும் , இதனை தொடர்ந்து மற்ற அமைச்சர்களை விட செந்தில் பாலாஜி சிறப்பாக வசூல் செய்து கொடுப்பதில் நம்பிக்கைக்குரியவர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மனதில் இடம் பிடித்ததை தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை வழக்கப்பட்டதாக கூறபடுகிறது.