திமுகவின் விடியலை நோக்கி என தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள திமுக எம்பி கனிமொழி அவர்களிடம், நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த இன்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம், ஆனால் கட்சி தொடங்கும் அனைவராலும் ஆட்சியை பிடிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது, அந்த கேள்விக்கு செல்ல நான் விரும்பவில்லை.
கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நல்லாட்சியை தரும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், அதனால் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என கனிமொழி தெரிவித்தார், இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
“கமல்ஹாசன் ரஜினிக்கு வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க மக்கள் விரும்பவில்லை” என்று அன்பு சகோதரி கனிமொழி அவர்கள் நெல்லையில் பேட்டி அளித்ததாக தகவல்… சகோதரி..! தாங்கள் அரசியலில் என்னை விட மூத்தவர். இருப்பினும் சில factsஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது… எம் தலைவர் நம்மவர் மற்றும் நண்பர் ரஜினி அவர்களைப்பற்றிய விமர்சனம் அவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்கள் எனில்,
உங்கள் தந்தையார் என் பெரும் மரியாதைக்குரிய நம் தலைவர் ஐயா அவர்கள், திரு.மாறன், திரு .அமிர்தம், திரு.உதயநிதி, திரு.ஸ்டாலின், திரு.செல்வம் மற்றும் இன்று sun pictures (யார் பெயராவது விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும்)என அனைவரும் திரைத்துறையில் ஈடுபட்டவர்கள் என்பதை உங்களுக்கு எடுத்து சொல்லும் துர்அதிர்ஷ்டம் எனக்கு! இல்லை அவர்கள் வயதை குறித்து உங்கள் கருத்து என்றால் அதற்கு, மேல் குறிப்பிட்டுள்ள பெயர்கள் சாலப்பொருந்தும்!
மக்களுக்கு மாற்றம் தேவை நல்ல ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று வருபவர்களை வரவேற்று போட்டியிடுங்கள்… மூத்த தலைவராக பல தலைமுறை அரசியலைக்கண்டு வென்ற உங்கள் தந்தையார் விரும்பி அரசியலுக்கு அழைக்கப்பட்டவர் “நம்மவர் ‘. அந்த அரசியல் மேதையின் கணிப்பை கௌரவப்படுத்துங்கள் தங்கையாரே..என நடிகை ஸ்ரீபிரியா அறிவுரை வழங்கியுள்ளார்.