ஷேக் அப்துல்லா என்கிற இஸ்லாமியர் ஒருவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிஞ்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், நமக்கு நேசக்கரம் நீட்டிய ஒருவரை தோற்கடித்து அவரது அன்புக் கரத்தைத் தட்டி விட்டிருக்கிறீர்கள் இஸ்லாமியர்களே !
“வார்டன்னா அடிப்போம்” என்று பொதுமைப்படுத்திக் கொண்டு சில பா ஜ க நண்பர்கள் நம்மை நம்பாமலே நட்பில் இருக்கிறார்களே என்று அவ்வப்போது எண்ணம் வரும். அது நியாயம்தானே என எண்ண வைத்துவிட்டீர்கள். எவ்வளவோ விளக்கங்கள் , எவ்வளவோ ஆதாரங்கள் கொடுத்தும் உங்கள் பைசா பிரயோஜமில்லாத தொடைநடுங்கித் தனத்தால் பா ஜ க வின் அன்பு வேட்பாளர் அண்ணாமலையைத் தோற்கடித்து ஒன்றும் தெரியாதது போல் பல்குத்திக கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்.
பயத்தில் தனிநாடு கேட்டு அழிந்தீர்கள்… பயத்தில் கோத்ராவில் கொளுத்தி அழிந்தீர்கள்… பயத்தில் குடியுரிமை ச் சட்டத்தை எதிர்த்து அழிந்தீர்கள்… ஆனாலும் உங்களின் நம்பிக்கையைப் பெற பிரதமரும் அவர் சகாக்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் நீங்கள் அறியாமையிலும், பயத்திலும் உழல்கிறீர்கள் என்று. அந்த பயத்தில் ஆறுதல் கரம் நீட்டி நயவஞ்சகமாய் உள்நுழைகிறது ஊரை அடித்து ஸ்விட்சர்லாந்தில் பதுக்கிய கூட்டம்.
அறியாமையிலும், பயத்திலும் கண்ணை மூடிக்கொண்டு “கை” இழுத்த திசையில் பயணிக்கிறீர்கள் அதன் சூனிய வரலாறு தெரியாமல்… கையோடு கரம் கோர்த்த சூரியனும் , மும்மலரும் உங்களுக்கும் சேர்த்தே தான் புதைகுழியைத் தோண்டுகிறது என்பதை உணர ஆக்ஸ்ஃபோர்டில் சென்று படித்திருக்க வேண்டியது இல்லை. அன்றாடச் செய்திகளை நினைவில் வைத்திருந்தாலே போதும்.
இனி இவர்களால் ஆகப் போவது எதுவும் இல்லை என்பதை நம்பிக்கையோடு உங்களை அணுகிய அண்ணாமலை ஐ பி எஸ்ஸுக்கு உணர்த்த முயன்றீர்கள். ஆனாலும் உங்கள் பிரச்சினையைப் புரிந்த அந்த சகோதரன் புன்னகையுடனே கடக்கிறார். மீண்டும் வருவார். நீங்கள் முதுகில் குத்துவீர்கள் என்பதைத் தெரிந்தே வருவார் அப்போதாவது அவர் நம்பிக்கையைப் பொய்யாக்குங்கள். உங்களை விட்டுவிட்டு அல்லது அழித்துவிட்டு தாங்கள் மட்டும் வாழ நினைத்திருந்தால் இந்தப் பெரும்பான்மை சமூகம் என்றோ அதை கணக்கச்சிதமாக செய்திருக்கும். ஆனால் அதன் தர்ம, நியாயங்கள் லட்சுமண ரேகை வரைந்து மீறவிடாமல் செய்திருக்கின்றன.
வாருங்கள் தேசம் வளர்ப்போம் என்கிறார்கள். “அஞ்சுவதும் அடிபணிவதும்” என தொடை நடுங்கியபடி அரற்றிக் கொண்டிருக்காமல், அஞ்சுவதற்கு அஞ்சி அஞ்சாமைக்கு அஞ்சாமல் அறம் காக்கச் சொன்ன வள்ளுவன் கூற்றை ஏற்று பா ஜ க வோடு கரம் கோர்த்துக் கொள்ளுங்கள். நாடு பாதுகாப்பாக இருக்கிறதா ? நம் வரிப்பணம் திருடப்படாமல் திட்டங்களாக திரும்பி வருகிறதா ? என்பது வரைக்கும் அரசியல் அறியுங்கள். போதும். அப்போது உங்கள் தேர்வு பா ஜ க வாக மட்டுமே இருக்கும். நம்பிக்கை துரோகம் தந்த வலியில் வசைபாடி விட்டேன் வெட்டி விடாதீர்கள் வெறி கொண்டு… குட்டிப் பிள்ளைகள் வாயில் பார்த்துக் காத்திருக்கிறார்கள் அத்தா வந்துவிடுவார் என்று .