24 மணி நேரமும் யாரையாவது வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கடத்துகிறார்.! தோல்விக்கு பிறகாவது தொகுதிக்கு வருவாரா செந்தில்குமார் எம்பி.?

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனி பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது திமுக, சென்னை மற்றும் டெல்டா பகுதியில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, கோவையில் அதிமுக வெற்றிபெற்றாலும், கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய கரூரில் உள்ள 4 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக கரூர் மாவட்டத்தில் அழுத்தமாக கால் பதித்துள்ளது. இதே போன்று ராமநாதபுரம், திருச்சி என பல மாவட்டக்களில் மொத்த தொகுதிகளையும் சுருட்டி எடுத்துள்ளது திமுக.

இந்நிலையில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில், தனது டிவீட்டர் பக்கத்தில் முழுநேரம் சிறு பிள்ளை தனமாக விளையாடி பொழுதை கடத்தி வரும், டாக்டர் செந்திகுமார் எம்பியாக இருக்கும் தருமபுரி தொகுதியில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் திமுக தோல்வியை தழுவியுள்ளது, இந்த தோல்விக்கு முக்கிய காரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது நாங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்த எம்பி செந்திகுமார் தொகுதி பக்கமே வரவில்லை என்கிற குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர் தொகுதி மக்கள்.

டிவீட்டர் பக்கத்திலே தொகுதி வளர்ச்சிக்காக எப்படி பாடு பட வேண்டும் என்பதை தர்மபுரி எம்பி செந்திகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு டிவீட்டரில் நேரத்தை செலவு செய்து வருகின்றவர் செந்தில் குமார், மேலும் பொழுது போகவில்லை என்றால் பாமக தொண்டர்களை வம்பிழுப்பது, ரஜினி ரசிகர்களை வாமிப்பிலுப்பது, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என இப்படி ஒவ்வருவராக வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை வீணடித்து வருகின்றவர் செந்தில்குமார் எம்பி.

இந்நிலையில் கொரோன அச்சத்தில் தொகுதி மக்கள் இருக்க, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தன்னை வீட்டில் தனிமை படுத்திகொண்டு டிவீட்டரில் விளையாடி வருவதாக தொகுதி மக்கள் குமுறுகின்றனர், மேலும் அவரை டிவீட்டர் தான் பார்க்க முடிகிறது தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை அதன் வெளிப்பாடாக தான் திமுகவுக்கு எதிராக வாக்களித்தோம் என்று வெளிப்படையாக தெரிவிக்கின்றனர் தர்மபுரி மக்கள்.

இதனை தொடர்ந்து வாக்கு எணிக்கைக்கு முதல் நாள் வரை, தேர்தல் முடிவுகள் வரும் அன்று மாம்பழம் நசுக்க படும், பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டதா.? , என நக்கல் செய்து வந்த திமுக எம்பி செந்தில்குமார், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தமாக திமுக வாஸ் அவுட் ஆன பின்பு சற்று அடக்கி வசித்து வருகிறார், இந்நிலையில் மக்கள் பாடம் புகட்டிய பின்பு, இனி டிவீட்டரில் விளையாடுவதை ஓரம் கட்டிவிட்டு தொகுதி பக்கம் செல்வாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.