பாஜக மாநிலத்தலைவர் K.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 01.11.2021 தேதி அன்று 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது. பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நேரடி வகுப்புக்களே சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், கருதுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டியது அவசியம் என்று சமீபத்தில் உலக சுகாதர மையத்தின் தலைமை விஞ்ஞானி திருமதி.சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தார்.
மேலும் ஏற்கனவே 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக இருக்கும் என்ற அச்சம் மெதுவாக விலகி வருகிறது. மேலும் இரண்டாவது அலையின் தாக்கமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டில், குறிப்பிட்ட தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிகள் மீண்டும் முழுமையாக இயங்க போகிறது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளித்தாலும், பள்ளிகளை திறக்கும் முன்னர் அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
தினமும் பள்ளிக்கு வரும் அனைவருக்கும் அடிப்படைச் சோதனைகள் செய்யப்பட வேண்டும். பணிக்கு வரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக இரண்டு கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக, தமிழக அரசு ஊதியம் வழங்காத காரணத்தால், மருத்துவச் செலவுக்கும் கூட பணம் இல்லாத மன உளைச்சலில், நோயுற்று இறந்துவிட்டார். இதைப் படித்த போது, இந்த செய்தி பொய்யான செய்தியாகப் போய் விடக் கூடாதா?
என்றுதான் என் மனம் எண்ணியது. நாமெல்லாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடி ஆகப்போவது என்ன? இதுவரை வறுமையின் காரணமாக சிகிச்சை கிடைக்காமல் இறந்த ஆசிரியர்கள் இரண்டு பேர், தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்கள் ஏழு பேர் என்று, ஆசிரியர் சமுதாயத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், என்ற கூடுதல் தகவல் கவலையளித்தது. தமிழகத்தில் அண்ணா யுனிவர்சிட்டி முதல் கிராமப்புற கல்லூரி வரை அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில், உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் 60 முதல் 70 சதவீதம் பேர், தொகுப்பூதியத்தில் அதுவும் கல்லூரியில் இல்லாமல், கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக சம்பளம் பெறும், தற்காலிக விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள், வருகால சமுதாயத்தின் சிற்பிகள், அதுவும் உயர் கல்வித் துறையின் ஆசிரியர்கள் இக்கால இளைஞர்களின் வழிகாட்டிகள். அவர்களின் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். இத்தனை மரணத்திற்குப் பிறகும் தமிழக அரசு, இன்னம் ஐந்து, ஆறு மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்க ஆவன செய்யவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் முதல்வரையும், அவர் புதல்வரையும் பாராட்டவும், மத்திய அரசின் மகத்தான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும், எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றவும் தான் நேரம் இருந்தத்தா? மாதங்களாக வழங்கப்படாத பேராசிரியர், மற்றும் விரிவுரையாளர்கள் ஊதியத்திற்கு நிதி ஒதுக்கவில்லையா? அதற்கு நேரம் இல்லையா?
நீட் தேர்வு தோல்வி பயத்தால் உயிரிழந்த மாணவர்களுக்காக பரிதாபப்படும் திமுக அரசு, ஆசிரியர்களின் உயிர் இழப்பை அலட்சியப்படுத்துவது ஏன்? தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு, நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தகுதியான சம்பளம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.