கூகுள் மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் கட்டண வசூலின்றி பணப்பரிவர்த்தனையை செய்து தருகின்றனர். வங்கிகளிடம் இருந்த பண பரிவர்த்தனை இப்போது மெல்ல மெல்ல யுபிஐ செயலிகள் வசம் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் வங்கி பரிவர்த்தணைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் அவர்கள் பிடித்தம் செய்யும் தொகை ஆகியவையே.
ஆனால் யுபிஐ செயலிகளின் மிகவும் எளிமையான நடைமுறைகளால் மக்கள் அவற்றின் பக்கம் ஈர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கோட்டக் மகேந்திரா வங்கியின் தலைவர் உதய் மகேந்திரா இதுபற்றி வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார். அதில் ‘பணம் செலுத்தும் வணிகம் குறித்த வங்கிகளின் குறுகிய பார்வையால் இதுபோன்ற செயலிகளிடம் மக்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கூகுள் பே மற்றும் போன் பே போன்ற நிறுவனங்கள் 85 சதவீதம் வணிகத்தை தங்கள் வசம் கொண்டிருக்கின்றன. இதை வங்கிகள் அலட்சியமாக கருதினால் தங்கள் வணிகத்தை முற்றாக இழக்க நேரிடும்’ எனக் கூறியுள்ளார்.