காதலியை ஏமாற்றிய காதலன் மீது பெட்ரோல் குண்டு வீசிய காதலி.! தூத்துக்குடியில் உச்சகட்ட பரபரப்பு.!

0
Follow on Google News

தூத்துக்குடி மாவட்டம் நெய்யூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் திருச்செந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். டுட்டோரியல் படிக்க வந்த ஜெசிமா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. ஜெசிமா, பிரவீனை அளவுகடந்து நேசிக்க தொடங்கினாள். பிரவீன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வெளிநாட்டில் கிடைத்த வேலைக்கு கிளம்ப தயாரானார். அப்போது ஜெசிமா எங்கு இவன் நம்மை விட்டு பிரிந்து சென்று விடுவானோ பயம் எழுந்தது.

ஆனால் பிரவீன் உன்னை கைவிடமாட்டேன் என்று உறுதியளித்து விட்டு வெளிநாடு சென்றான். வெளிநாடு சென்றாலும் பிரவீன், தன் காதலின் ஜெசிமாவிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசி வந்துள்ளார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிரவீன், ஜெசிமாவை கண்டுகொள்ளவில்ல. பலமுறை ஜெசிமா பேச முயற்சித்தும் பிரவீன் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்புதான் பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது ஜெசிமாவுக்கு தெரியவந்தது.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெசிமா பிரவீனிடம் பலமுறை தன்னைத் திருமணம் செய்ய வலியுறுத்தி கெஞ்சி உள்ளார், கடைசியில் மிரட்டியும் பார்த்துள்ளார்.எதற்கும் பிரவீன் அசரவில்லை, ஜெசிமாவுக்கு தலைக்கேறியது கோபம். தன் உடன்பிறந்த தம்பியின் உதவியுடன் கூலிப்படை அமைத்து தன் காதலன் பிரவீன் வீட்டு வாசலில் பெட்ரோல் வெடிகுண்டு வீச உத்தரவிட்டுள்ளார், உடனே கூலிப்படையும் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு பிரவீன் வீட்டு வாசலில் நின்ற காரின் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசியது.

பெட்ரோல் குண்டு வீச்சில் கார் தீ பிடித்து சேதம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தன் காதலியின் மீது பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தற்போதும் ஜெசிமா அவருக்கு உதவிய தம்பி மற்றும் கூலிப்படையையும் போலீசார் தேடி வருகின்றனர். காதலியை ஏமாற்றிய காதலனுக்கு, காதலி பெட்ரோல் வெடிகுண்டை பரிசாக கொடுத்தார் என அக்கம் பக்கத்தினர் முணுமுணுத்து கொண்டனர்…