மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தியின் மகளான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். 56 வயதான ஆஷிஷ் லதா தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்.ஆஷிஷ் லதா கடந்த 2015ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆகஸ்ட்டில் நியூ ஆப்பிரிக்கா அலையன்ஸ் புட்வேர் நிறுவனத்தின் தலைவரும் மற்றும் தொழில் அதிபருமான மகாராஜ் என்பவரை சந்தித்துள்ளார்.
மகாராஜிடம், ஆஷிஷ் லதா கூறுகையில் நெட்கேர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 3 கன்டெய்னர் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக எனக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான இறக்குமதி சுங்க வரியை செலுத்த போதுமான பணம் என்னிடம் இல்லை. எனவே நீங்கள் எனக்கு நிதி உதவி செய்தாள் அந்த பணத்தை விரைவாக திருப்பி கொடுத்து விடுகிறேன். உங்களிடம் நான் வாங்கும் கடனுக்கு எனக்கு வரக்கூடிய லாபத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆஷிஷ் லதா, மகாராஜிடம் கூறியுள்ளார்.
ஆஷிஷ் லதா கூறியதைக் கேட்ட மகாராஜ் ₹. 3.22 கோடி கொடுத்து உதவியுள்ளார். சில நாட்கள் கடந்த செல்லச் செல்ல மகாராஜ் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கவில்லை என்று கூறி மறுத்துள்ளார். பணம் வாங்கியதற்கான ஆதாரத்தை மகராஜ் காண்பித்தும் தான் வாங்கவில்லை என்று மறுத்து வந்துள்ளார். மேலும் இது மட்டுமில்லாமல், ஆஷிஷ் லதா போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றியுள்ளார். மகாராஜ் ஆஷிஷ் லதா மீது 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகான விசாரணையும் நடந்தது அதில் ஆஷிஷ் லதா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தார். இந்த வழக்குக்கான விசாரணை மீண்டும் முன்தினம் நடைபெற்றது. இதில் காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு வழங்கியது தென்னாப்பிரிக்க நீதிமன்றம்.