ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, அதிக ஈரோடு மாவட்டம், வசந்தா புரத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிர்ச்சி தரும் வகையில் மனு ஒன்றை அளித்தார் அதில், கொடுமுடி ஒன்றியம் வெல்லோட்டம்பரப்பு பேரூராட்சி வேலம்பாளையம் அருகில் டாஸ்மாக் கடையை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
சிறு குறு விவசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தினமும் மாலையில் மது குடித்து விட்டு செல்லும் பழக்கமுள்ளவர்கள், கடை திறக்கப்படாமல் உள்ளதால் வெளியூர்களுக்குச் சென்று குடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெளியூர் செல்வதால் போக்குவரத்து செலவு கூடுதல் ஆகிறது எனவே உள்ளூரில் கட்டப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்,
அல்லது குடிமகன்கள் வெளியூர் சென்று குடித்து வர வசதியாக தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தது, இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட குறை தீர்க்கும் அதிகாரிகள், மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி செங்கோட்டையனை அங்கிருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த செய்தியை குறிப்பிட்டு பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது.
விடியலுக்கு சூப்பர் வேண்டுகோள்.. புதிய சேவை தொடங்குமா* திமுக? Development development development. என்றும், மேலும் மனு அளித்தவருக்கு பதில் தரும் விதத்தில், அண்ணா கவலைப்பட வேண்டாம் கோபாலபுரத்தில் இருந்து யாராவது உங்களை டாஸ்மாக் கடைக்கு அழைத்து வந்து விடுவார்கள், இல்லையேல் டோர் டெலிவரியும் செய்வார்கள். என்று திமுக அரசை மரண கலாய் கலாய்த்த காயத்ரி ரகுராம்.
மேலும் அவர்கள் உங்கள் வாக்குகளை மட்டுமே விரும்புகிறார்கள், உங்கள் வாழ்க்கை ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தேவை உங்கள் வாக்கும் உங்கள் பணமும் மட்டுமே என பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.