முன்னால் அதிமுக அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி, எதிர்கட்சியாக இருந்த திமுக மற்றும் அதன் கட்சி தலைவர் முக ஸ்டாலினை தனது நகைச்சுவை கலந்த பேச்சால் விமர்சனம் செய்து வந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடவுள் நம்பிக்கையில் நாங்களும், பாஜகவும் ஒன்று தான் என்றும், மோடி கண்ணசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தானே இருக்காது எனவும் அமைச்சராக இருக்கும் போதே பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தவர் ராஜேந்திர பாலாஜி.
மேலும், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் ஒன்றுபட்ட இந்தியாவின் நன்மைக்கே.அவர் நிறைவேற்றுகின்ற ஒவ்வொரு சட்டமும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியே. மோடியின் தைரியமான முடிவில் நேதாஜியை பார்க்கிறோம். தேச ஒற்றுமைக்கு பிரதமர் எடுக்கின்ற கடுமையான நடவடிக்கைகளில் சர்தார் வல்லபாய் படேலை பார்க்கிறோம். பிரதமர் பயணிக்கின்ற தெய்வீக வழிமுறையில் பசும்பொன் தேவரை பார்க்கிறோம்.
பிரதமரின் தைரியமான முடிவுக்குப் பின்னால் மதம், மொழி, இனங்களைக் கடந்து தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் உங்கள் பின்னால் இருப்பான் என கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பலமுறை பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீடிர் பயணமாக தற்போது டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததில்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 5ம் தேதி தஞ்சையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டவர் அங்கேயே தங்கி முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார், அவருடன் பாஜக முக்கிய தமிழக தலைவர்களும் சென்றுள்ளார்கள் அதில் திருநெல்வேலி சட்டமன்ற பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்றுள்ளார். சமீப காலமாக ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவது குறித்து நயினார் நாகேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது மதுரையில் இருந்து டெல்லிக்கு அவசரமாக ராஜேந்திர பாலாஜி சென்றுள்ளார். இது அவர் பாஜகவில் இணைவதற்காக தான் டெல்லி சென்றுள்ளதாக கூறபடுகிறது, நாளை (9-8-2020) காலை டெல்லி பாஜக அலுவகத்தில் பாஜக தேசிய தலைவர் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளுக்காக தான் தமிழக பாஜக தலைவர்கள் இரண்டு தினகளுக்கு முன்பே டெல்லி சென்றதாக கூறபடுகிறது.