தந்தை பெரியாரா – பா.ஜ.க.வா? தந்தை பெரியாரா – மோடியா? ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்.!

0
Follow on Google News

கடந்த வாரம் பா.ஜ.கவின் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பா.ஜ.க வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். தேஜஸ்வி சூர்யா இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,

பா.ஜ.க. இளைஞரணி தேசிய தலைவரும், கருநாடகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா என்பவர் – ‘‘பெரியாரின் கொள்கைகளை ஒழிப்பதற்காகவே பா.ஜ.க. தமிழகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது” என்று கோவையில் பேசியுள்ளார். பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது – தமிழர்களே, தமிழர்களே, சிந்திப்பீர்! சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமதர்மம், சமத்துவம், பெண்ணுரிமை, தீண்டாமை- ஜாதி ஒழிப்பு,

இனநலம், மொழி உரிமை – தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக 95 வயதிலும் உழைத்த ஒப்பற்ற தலைவர் – கட்சி, மதம், ஜாதி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் – இன்னும் சொல்லப்போனால், சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நீதிபதியால் தமிழ்நாட்டின் தந்தை என்று மதிக்கத்தகுந்த தலைவர் தந்தை பெரியார் என்று போற்றப்பட்டவர்; நாடாளுமன்றத்திலேயே ‘‘தந்தை பெரியார் வாழ்க!” என்று முழங்கிப் பதவிப் பிரமாணம் எடுக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான தந்தை பெரியார் கொள்கைகளை ஒழிக்கவே பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்துள்ளதாம்;

தந்தை பெரியாரா – பா.ஜ.க.வா? தந்தை பெரியாரா – மோடியா? நேரடியாகவே களத்துக்கு வந்துவிட்டனர். தமிழர்களே, நாம் யார் என்று காட்டவேண்டாமா? தமிழ் மண் எத்தகையது என்பதை நிரூபிக்க வேண்டாமா?அரிய சந்தர்ப்பம்! தந்தை பெரியாரே, நமது பே(போ)ராயுதம்! சரியான தருணம் இது – முடிவு செய்வீர், தமிழர்களே! என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.