சசிகலா தரப்பில்லாத அதிமுக என்ற ஒன்றில் மோடி உறுதியாக இருந்தார்.!பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜன் சோழன் பார்வையில்…..

0
Follow on Google News

பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜன் சோழன் பார்வையில் சசிகலா …எம்ஜிஆரை சேலஞ்ச் செய்து அதிமுகவில் இருந்து பிரிந்து STS நமது கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து போட்டியிட்டார் ஆனால் 2% தான் அவரால் வாங்க முடிந்தது.மீண்டும் அதிமுகவிலேயே ஐக்கியமாகும் சூழல்தான் வந்தது.இந்த அரசியல் நிகழ்வில் இருந்து பாடம் படித்து எழுந்து வந்தவர் M.நடராஜன். நடராஜனும் அத்தனை காய் நகர்த்தலும் அண்ணா திமுகவிற்குள் அந்த கட்சியை கைப்பற்றுவது என்பதாக மட்டுமே இருந்தது.காரணம் தலைமை மிரட்டி தனிக்கட்சி துவங்கி வெற்றி பெற முடியாது என்பதை ஆழமான தன் அரசியல் அறிவால் புரிந்து வைத்திருந்தார்.

எப்படி கருணாநிதி திமுகவை பிடிக்க திராவிடம் என்ற கருத்தியல் வசதியாக இருந்ததோ அது போல நமக்கு தமிழ் தேசிய கருத்தியல் அதிமுகவை கைப்பற்ற உறுதுணையாக இருக்கும் என்பது வரை திட்டமிட்டு நகர்த்தி வந்தார் படிப்படியாக.கருணாநிதி எப்படி திமுகவின் அதிகார பீடமான வேளாள லாபியை உடைத்து ஏறினாரோ அதுபோல அதிமுகவை சூழ்ந்திருக்கும் பிராமண லாபியை நான் ஏறுவேன் என்பதாக வீரமணி போன்றவர்களையும் திருப்தி செய்து தன் பக்கம் வைத்திருந்தார் நடராஜன்.நிற்க.

நடராஜனின் காய் நகர்த்தல்களை அடித்தளமாகக் கொண்டு தனக்கே உரிய பாணியில் நகர்ந்தவர் டிடிவி.இவரும் அதிமுகவை கைப்பற்றுவதையே தன் இறுதி இலக்காக வைத்திருந்தார்.இரட்டை இலை,உதயசூரியன் என்ற சின்னங்களை வீழ்த்திய பிறகும் கூட அதிமுகவை கைப்பற்றுவோம் என்றே சொன்னார்.காரணம் நாம் தனியாக இருந்தால் இன்னொரு STS ஆகத்தான் முடியுமே தவிர ஒரு கருணாநிதியாக ஆக முடியாது என்பது இவருக்கும் தெளிவாகத் தெரியும்.

பாஜகவை பொறுத்தவரை இவர்களுக்கு நேர் எதிராகவே இருந்தது எந்த சமரசத்துக்கும் வரவில்லை.சசிகலா தரப்பில்லாத அதிமுக என்ற ஒன்றில் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார்.அதற்கு காரணம் பல உண்டு,ஆனால் வெளிப்படையாக மீண்டும் அதிமுக VS திமுக என்று மட்டுமே தமிழகம் நடைபோடக்கூடாது என்பதில் இருவேறு கருத்தில்லாமல் இருந்தார்கள்.

2019 ல் வேறு வழியில்லாமல் டிடிவி தனித்து களம் கண்டார்.மீடியா கொடுத்த மிகப்பெரிய விளம்பரம்,ஆர்.கே நகர் வெற்றி,மிஸ்டர் கூல் பட்டம் என எல்லாவற்றையும் சேர்த்து கூட 5% ற்கு மேல் தாண்ட முடியவில்லை.ஆனால் இபிஎஸ்&ஓபிஎஸ் 2019 ல் பாஜக மற்றுய் பாமகவை பிடித்து வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி அதிமுக தாங்கள்தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.அடுத்தது இடைத்தேர்தலில் வெற்றியும் கிடைத்துவிட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது டிடிவிக்கு விழுந்த வாக்குகளை சிலவாறாக பிரிக்கலாம்.அது ‘அவர் மீது பற்றுதல் கொண்ட வாக்குகள் – பாஜகவிற்கு எதிரான வாக்குகள் – இபிஎஸ்&ஓபிஎஸ் தலைமைக்கு எதிரான வாக்குகள்’ இப்படித்தான் அங்கம் வகிக்கிறது அந்த 5% வாக்குகள்.இப்படியிருக்க அவர்கள் வெறுத்த இரட்டை தலைமை மற்றும் பாஜக கூட்டணியுடன் டிடிவி தினகரன் இணைந்தால் அந்த வாக்குகள் எப்படி அதிமுக கூட்டணிக்கு வரும்?

அதிலும் பாஜக தென்மாவட்டத்தை பொறுத்த வரை புதிய சமூகங்களை இந்த கூட்டணிக்கு பின்புலமாக கொண்டு வந்துள்ளது.இந்த கள மாற்றத்தை அதிமுகவும் புரிந்து கொண்டுவிட்டது எனவே,அதிமுக + டிடிவி என்பது களத்தில் இருவருக்குமே பொருந்தாத கூட்டணி.அப்படி இணைகிற போது இருவருமே தங்கள் வாக்குகளை இழக்க வேண்டி வருமே அல்லாமல் அது பரஸ்பரமாக வாக்குகளை பரிமாறிக்கொள்ளும் கூட்டணியாக அமையாது.

அமமுக என்கிற கட்சியே பாஜக எதிர்ப்பில் உருவானது.இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது என்ற கோஷத்தில்தான் டிடிவி ஆர்.கே.நகரில் வென்றார்.இந்த தளம்தான் அவரை மூன்றாவது சக்தியாக இங்கே அனுமதித்தது ஆனால் இதிலிருந்து டிடிவி நழுவிட்டார்.அவருக்காக நடக்கும் கருத்துருவாக்கம் எல்லாமே பாஜகவோடு டிடிவிக்கு டீல் முடிந்துவிட்டது என்பதாக இருக்கிறது.இது அவரை ஹீரோவாக முன்னிறுத்தி பார்த்தவர்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் தரும்.. அதிமுக + பாஜக கூட்டணி என்பது சசிகலா இல்லாமல் பயணிப்பதையே விரும்புகிறது.அதனால்தான் பல கட்சிகளும் சமூகங்களும் இவர்களிடம் தற்போது ஒருங்கிணைகிறார்கள்.இதை குழப்ப இருவருமே விரும்ப மாட்டார்கள் என்பதுதான் என் புரிதல் பார்ப்போம்.