நாடக காதல் குறித்து வெளியான திரௌபதி திரைப்படத்தில் வருவது போன்று தமிழக அமைச்சருக்கு நடந்துள்ள சம்பவம் ஒரு அதிகாரம் பலம் படைத்த ஒருவரின் மகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடும்பத்தினர் தங்கள் பெண் குழந்தைகளை இந்த நாடக காதல் கும்பலிடம் இருந்து பாதுகாப்பது பெரும் சவால் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. மேலும் தொடர்ந்து நாடக காதல் கும்பலால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் தருணமாக அமைச்சருக்கு நடந்த சம்பவம் அமையட்டும் என கருத்துக்கள் நிலவி வருகிறது.
வசதியான வீட்டு பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி, அந்த பெண்களை மூளை சலவை செய்து காதல் வலையில் சிக்க வைத்து பின் அந்த பெண்களிடம் நெருக்கமாக புகைபடங்களை எடுத்து வைத்துக்கொண்டு. அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியாமல், ஏன் நாடக காதல் கும்பலின் வலையில் விழுந்த அந்த பெண்ணுக்கே தெரியாமல் கூட சில போலியான பதிவு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும் நாடக காதல் கும்பல் தங்கள் ஆட்டத்தை தொடங்குவார்கள்.
தாங்கள் ஏமாற்ற படுகிறோம் என்று உணர்ந்து அந்த பெண் தனது காதலை முறித்து கொண்டு விலக முடிவு செய்தால் கூட அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படகளை வெளியிட்டுவிடுவோம் என மிரட்ட தொடங்கிவிடும் அந்த நாடக காதல் கும்பல். அது போன்று தான் சமீபத்தில் அமைச்சரின் பெண் ஒருவர் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து நாடக காதலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து விலகி பெற்றோரின் அரவணைப்பில் இருந்து வருவதாக கூறபடுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்த பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் சுயரூபத்தை வெளியே காண்பிக்க தொடங்கியுள்ளார் அமைச்சரின் மகளிடம் நாடக காதலில் ஈடுபட்ட அந்த நபர். ஆனால் இந்த சம்பவம் அரசியலை கடந்து . ஒரு பெண்ணை பெற்ற தகப்பனுக்கு ஏற்படும் வலி என்ன என்பதை அனைவராலும் உணர முடியும் என்பதை பாதிக்கப்பட்ட அமைச்சருக்கு பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் தனது அதிகார பலத்தால் நாடக காதல் கும்பலிடம் இருந்து தனது மகளை பத்திரமாக மீட்டெடுத்துவிட்டார். ஆனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை பெற்ற தந்தையர்கள் பலர் இந்த நாடக காதல் கும்பலால். தங்கள் பெண்ணை மட்டுமில்லை மானம், மரியாதை என அனைத்தையும் இழந்து நடமாடும் பிணமாக எத்தனையோ பெயர் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களுக்கு முற்று புள்ளி வைக்க உத்தரப்பிரேதேசம் போன்று பெற்றோர் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்ய முடியாது போன்ற சட்டங்களை தமிழக அரசு அமல் படுத்த வேண்டும் என்றும் மேலும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த திரௌபதி போன்ற திரைப்படங்கள் பல வர வேண்டும் என்பதே தமிழக முழுவதும் நாடக காதல் கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்களை பெற்ற தந்தைகளில் கருத்து கூட