துபாயிலிருந்து, கேரளாவில் உள்ள ஐக்கிய அரசு அமீரக துணை தூதரக முகவரிக்கு கடந்த வருடம் சரக்கு விமானம் மூலம் உருளை வடிவில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி அடையாள அட்டையுடன், அந்த பார்சலை பெற வந்த சரித் என்பவரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும்.
இதன் பின்பு தூதரகத்தின் பெயரைச் சொல்லி சரித் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.இதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷிற்கு இந்த தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதும் மேலும் இது போன்று பல முறை தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
இதனை தொடர்ந்து கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் தலைமறைவாக இருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.ஸ்வப்னா சுரேஷை கைது செய்து தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தலில் மூலம் வரும் பணம் சினிமா துறையில் முதலீடு செய்யப்பட்டுவதாகவும் மேலும் தீவிரவாத செயல்களுக்கு இந்த பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியது தேசிய புலனாய்வு அமைப்பு.
இதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் சினிமா துறையை சேர்ந்த முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணித்து வந்தது தேசிய புலனாய்வு அமைப்பு, மேலும் சினிமா துறையை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது தேசிய புலனாய்வு அமைப்பு.
இதனை தொடர்ந்து பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சொந்தமான வாங்கி கணக்கில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தேச விரோத அமைப்புகளில் இருந்து பணம் வந்துள்ளதாக கண்டுபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதில் தொடர்புடைய அந்த பிரபல நடிகரின் செயல்பாடுகள் தீவிரமாக மத்திய உளவுதுறை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் அந்த நடிகரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது மத்திய போலீசார் விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.