கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாஸ். இவர் பூனஹள்ளியைச் பகுதியில் வசித்து வரும் விவசாயி. கடந்த 2019வருடம் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஷாஹிகுமார் என்பவருடன் நட்பு கிடைத்துள்ளது.
இதன் பிறகு கடந்த வருடம் ஷாஹிகுமார் கர்நாடகா சென்றுள்ளார். அப்போது விவசாயி சீனிவாஸின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அங்கு அவரை தனியாக அழைத்து இந்த வீட்டில் புதையல் இருப்பதாக கூறியுள்ளார். அதை விரைவாக வெளியில் எடுக்க வேண்டும் இல்லையென்றால் சில அசம்பாவிதங்கள் நடக்கும் என்று கூறி பூஜைக்காக இருபதாயிரம் கேட்டு உள்ளார். அவர் சொன்னதை நம்பி விவசாயம் சீனிவாஸ் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
இதான் பிறகு கொரோனா காரணமாக பூஜைகள் நடத்தும் திட்டம் தள்ளி சென்றது. கடந்த இரண்டு மாதங்கள் முன்பு ஷாஹிகுமார் சீனிவாஸை வீட்டில் சந்தித்து பூஜைகள் தொடங்கினார். அப்போது ஷாஹிகுமார் இந்த பூஜையில் ஒரு பெண் நிர்வாணமாக அமர வேண்டும் அதுவும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக தான் இருக்க வேண்டும், அப்போதுதான் புதையல் வெளியாகும் என கூறியுள்ளார்.
ஆனால் சீனிவாஸ் தான் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை எப்படி அமர வைப்பது என்று காசு கொடுத்து வெளியில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து எங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் என கூறி பூஜையில் அமர வைத்துள்ளார். இந்த பூஜை நடைபெற்று கொண்டிருக்கும் போது உள்ளூர் மக்களுக்கு இந்த பூஜை குறித்த தகவல் தீயாய் பரவி சாத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
நிர்வாண பூஜைக்காக காசு கொடுத்து அழைத்து வந்த பெண்ணையும் அவருடன் குழந்தையை போலீசார் மீட்டனர். மேலும் குழந்தையும் இந்த பூஜையில் கலந்து கொண்டதால் நரபலி கொடுக்க நடந்திருக்கலாம் என்று பரபரப்பு உண்டானது ஆனால் விசாரணையில் குழந்தையை கொடுப்பதற்காக அழைத்து வரவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.