தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதால், தேவையின்றி சாலையில் வாகனகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, சாலையில் செல்லும் வாகனங்களை போலீசார் கடும் சோதனைக்கு பின்பு தான் அனுமதித்து வருகின்றனர், இந்நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி தமிழகம் முழுவதும் இ பாஸ் சான்றிதழ் பெற்று வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருப்பதாக குற்றசாட்டு எழுந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனுரை சேர்ந்த சரவணன் மற்றும் அவருடன் 5 பேர் என மொத்தம் ஆறு பேர் சின்னமனூரில் இருந்து காரில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் இவர்கள் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் இறப்புக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார்கள்.
தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் இ-பாஸை சோதனை செய்த போது, அதில் பெரியகுளத்தில் உறவினர் இறந்துள்ளதாகவும் இறப்புக்கு செல்வதற்காக காரணத்தை தெரிவித்து இ-பாஸ் பெற்றது தெரியவந்தது, ஆனால் அவர்கள் இறப்புக்கு செல்லவில்லை வேறு ஒரு காரணத்துக்காக செல்கிறார்கள், போலியான தகவலை தெரிவித்து இ-பாஸ் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொய்யான காரணத்தைக் கூறி இ-பாஸ் பதிவு செய்த சரவணன் மற்றும் பிரவுசிங் சென்டர் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் அவர்கள் பயணித்த காரையும் பறிமுதல் செய்தனர், இதே போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொய்யான காரணங்களைக் கூறி நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது குறிபிடத்தக்கது.