சாதி வாக்குகளை மட்டுமே நம்பி வேட்பாளராக கோவில் பட்டியில் போட்டியிடும் TTV தினகரனுக்கு, அந்த தொகுதியின் உச்சகட்ட சாதி அரசியல் தற்போது அவருக்கு எதிராக திருப்பியுள்ளது, கோவில்பட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என அந்த தொகுதி முழுவதும் நடந்த சர்வே ரிப்போர்ட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் இடத்தில் சாதி அரசியல் உச்சகட்டமாக தலை தூக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் TTV தினகரன் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக லேட்டஸ்ட் ரிப்போர்ட் தெரிவிக்கின்றனர்.
தொகுதி முழுவதும் TTV தினகரனுக்கு ஆதரவாக அதிகமான பிரச்சார வாகனங்களை சுற்றி வந்தாலும் கள நிலவரம் தினகரனுக்கு எதிர்மறையாக உள்ளது. அதிமுகவினர் இந்த தொகுதியில் பெரும்பாலும் பெண்கள் வீடு வீடாக அதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 40 வருடங்களுக்கு முன்பு உச்சக்கட்ட சாதி மோதலை சந்தித்த கோவில் பட்டியில் தற்போதும் அதே சாதி மோதல் தொடர்கின்றது, அப்போது ஆயுதக்களால் மோதிக்கொண்ட மக்கள் தற்போது தேர்தலில் அளிக்கும் வாக்குகளால் யார் பலசாலி என்பதை நிரூபிக்க காத்து கொண்டிருக்கின்றனர்.
தன் சார்ந்த சமூக வாக்குகள் அதிகமாக கோவில்பட்டி தொகுதியில் இருக்கின்றது, மேலும் இந்த தொகுதியில் உள்ள உச்சகட்ட சாதி பகை தனக்கு சாதகமாக இருக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக TTV தினகரன் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. கோவில் பட்டி தொகுதியில் முக்குலத்தோர் சமூக வாக்குகள் 23 சதவிகிதம் இருந்தாலும் மற்ற சமூக வாக்குகளான நாயுடு சமூகம் 20 சதவிகிதம், நாடார் சமூகம் 19 சதவிகிதம்.
மேலும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் 15 சதவிகிதம் என TTV தினகரனுக்கு எதிராக சுமார் 55 சதவிகித வாக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.அதிமுக சார்பில் போட்டியிடும் கடம்பூர் ராஜு நாயுடு சமூகத்தை சேர்ந்தவர், அவர் சார்ந்த சமூக வாக்குகள் இவருக்கு முழுமையாக வாக்குகளாக விழும் என கூறப்படுகிறது, அதே போன்று TTV தினகரனுக்கு எதிராக இருக்கும் நாடார் சமூக வாக்குகள், மற்றும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவை பிடிக்காதவர்கள் கூட , TTV தினகரன் வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் அவரகள் கடம்பூர் ராஜுவுக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடப்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி இந்த தொகுதியில் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் பெரும்பாலான சிறு குறு தொழில்கள் முடங்கியதற்கு கரணம் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம் தான் என்பதால், திமுக ஆதரவு நிலையில் இருந்த மக்கள் கூட இம்முறை அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கும் மன நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் முன் பகையை தேர்தல் மூலம் பழிதீர்க்க அந்த தொகுதி மக்கள் சாதி உணர்வுடன் இருப்பது, TTV தினகரன் எத்தனை கோடி அள்ளி இறைத்தாலும் அங்கே நடக்கும் உச்சகட்ட சாதி அரசிலுக்கு ,மத்தியில் இவர் தோல்வி அடைவது உறுதி என லேட்டஸ்ட் சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கின்றது.