நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆனால் அதிமுகவில் எதிர்கட்சி தலைவர் யார் என முடிவு செய்வதில் இரு தரப்பினர் இடையே நடந்து வரும் வாக்குவாதம் சாதி மோதலாக உருவெடுத்துள்ளது, இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டம் திங்கள் கிழமை நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா – ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக இருந்தவர்கள் பின் சசிகலா சிறைக்கு சென்றபின், TTV தினகரன் அதிமுகவில் இருந்து ஓரம் கட்ட பட்ட பின் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது, இதன் பின்பு இரண்டு அணிகளும் ஒன்றாகி அதிமுகவை வழிநடத்தி வந்தனர், ஆனால் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தில் உள்ள அவர் சார்ந்த கவுண்டர் சமூகத்துக்கு அதிக முக்கியதுவம் கொடுப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
இது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆதரவு தந்த மற்ற சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரகள், மற்றும் அமைச்சர்களுக்கு அதிருப்தியை அளித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர், மேலும் முக்குலத்தோர் சமூகத்தை அதிமுக புறக்கணிப்பதின் மூலம் ஓபிஎஸ் பலம் குறையும் என திட்டமிட்டு தொடர்ந்து முக்குலத்தோர் சமூகத்தை வஞ்சிக்கு வகையில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கினார் எடப்பாடி என கூறப்பட்டது.
மேலும் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்தால் முக்குலத்தோர் சமூகம் அதிமுகவில் பலம் பொருந்தியவர்களாக மீண்டும் உருவெடுத்து விடுவார்கள் என சசிகலா அதிமுகவில் இணைவதற்கு அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற போது, எடப்பாடி பழனிசாமி அதை ஏற்று கொள்ளவில்லை என கூறபடுகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வரை பொறுமையாக இருந்த ஓபிஎஸ் தற்போது தனது முழு பலத்தையும் காண்பிக்க தொடங்கியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓன்று கூடி எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியபோது, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார், மேலும் இதுவரை தென் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையாக இருந்தவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், ஓபிஎஸ் க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இ பி எஸ் – ஓபிஎஸ் மோதல் கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் சமூக மோதலாக உருவெடுத்துள்ள நிலையில், அதிமுகவில் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள மற்ற சமூகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர், இதனை தொடர்ந்து திங்கள் கிழமை நடைபெறும் அதிமுக கூட்டத்தில் எதிர்கட்சி தலைவராக யாருக்கு வாய்ப்பு மறுக்க படுகிறதோ அவர்கள் சார்ந்த சமூகம் ஒட்டு மொத்தமாக அதிமுகவுக்கு எதிராக திரும்பும் என அரசியில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.