சீமானை ஒழித்துக் கட்டுங்கள். இல்லையேல் உங்களால் சங்கிகளை ஒழிக்க முடியாது.! தோசை புகழ் மதிமாறன் ஆவேசம்.!

0
Follow on Google News

சீமான் சங்கிகளின் கையாளாக ஆயிட்டார்’ அவரே ஒரு சங்கிதாங்க. இத பத்து வருசமா நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். ‘காந்தி செத்துட்டாரா?’ என்பது போல் இப்பதான் கண்டுபிடிக்கிறாரகள் என பெரியாரிஸ்ட் தோசை புகழ் மதிமாறன் தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்ததாவது, ஒருவர் அவரே தன்னை முற்றிலுமா அம்பலப்படுத்திக்கிட்டதான் கண்டிப்பார்கள். மாறாக, இவர்கள் அம்பலப்படுத்த மாட்டார்கள்.

சீமானின் தமிழன் x தெலுங்கன் இனவாத பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவரின் சங்கித்தனம் கண்களுக்குத் தெரியல. அவரின் இனவாதமே சங்கித்தனத்தின் ஒரு பிரிவுதான். சீமானுக்கு முன்னோடியாகப் பெரியாரை தமிழரல்ல என்று பேசிய மணியரசனையே இப்போதுதான் கண்டிக்கிறார்கள் பல பெரியாரிஸ்ட்டுகள்.

அப்போது அவர் பெரியாரை திட்டினாலும் வைகோவை சிறந்த தலைவராகக் கொண்டாடினார். வைகோவுடன் இருந்தார். அதனால் அவரைக் கண்டிக்காமல் விட்டார்கள். இப்போ மணியரசன் சீமானோடு. அவர்கள் ராமன ஒத்துக்கிட்டதான் இந்தியன் என்கிறார்கள். இவர்கள் முருகனை ஒத்துக்கிட்டதான் தமிழன் என்கிறார்கள். அவர்கள் இந்தியனை இந்துமதத்திற்குள் தேடுகிறார்கள். இவர்கள் தமிழனை சைவ சமயத்திற்குள் தேடுகிறார்கள். ரெண்டுபேருமே சங்கிதான்’

என ஊர்ஊரா பேசினேன். இவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளிலும் பேசினேன். தமிழ் தேசிய சங்கி என்கிற பெயரையே நான் தான் சூட்டினேன். தமிழ் கடவுள், சிறு தெய்வ வழிபாடு தமிழன் அடையாளம் எனப் பெரியாரை ஆதரித்துக் கொண்டே பேசுவதும் சங்கித்தனத்தின் கூறுகள்தான். ‘சைவ சமயத்திற்கு வா, மாலியம் நம் சமயம்’ என்பது மட்டும் ‘தாய் மத்திற்குத் திரும்புதல்’ ஆகாது. ஆசிவாகம் தான் தமிழர் சமயம் என்பதும் ‘இஸ்லாம், கிறிஸ்தும் வெளிநாட்டில் இருந்து வந்தது’ என்பதைதான் சொல்கிறது,

அதுவும் தாய் மதத்திற்குத் திருப்புகிற வேலைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நெடுமாறன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் தீவிர திராவிட எதிர்ப்பு குறித்து ஒரு வார்த்தைக்கூடக் கண்டிக்காதவர்கள் சீமானைக் கண்டிப்பது வேடிக்கை. முதலில் உங்களுக்குள் இருக்கிற சீமானை ஒழித்துக் கட்டுங்கள். இல்லையேல் உங்களால் சங்கிகளை ஒழிக்க முடியாது. சீமான் போன்ற சங்கிகளைதான் உருவாக்க முடியும் என மதிமாறன் தெரித்துள்ளார்.