எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு.! ஆனால் சாலையை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி கோரிக்கை.! ஏன் எந்த நாடகம்.?

0
Follow on Google News

ஒருபக்கம் எட்டுவழி சாலை விரிவாக்கத்துக்கு எதிப்பு தெரிவித்துவிட்டு மறுபக்கம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கும் திமுக தர்மபுரி எம்பியின் செயல்கள், அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த தர்மபுரி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சேலம்-சென்னை வரை அமைய உள்ள 8 வழி சாலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்,

இந்த புதிய எட்டு வழிச் சாலை திட்டத்தினால் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் பாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தினால் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 17 பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கிறது.சேலம்-சென்னை வரை அமைய உள்ள 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடக் கோரி மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

மேலும் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் , சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த திமுக எம்பி செந்தில்குமார் சென்னை- சேலம் இடையே 277 கிலோமீட்டர் தூரத்திற்கு எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை தடை செய்யக் கோரி மாவாட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இந்நிலையில் எட்டு வழி சாலைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக எம்பி செந்தில்குமார், தற்போது தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யமத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் தொப்பூர் கணவாய் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவதனால் அதனை சரிசெய்யும் வகையில் அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்து மேலும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் இந்த தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி பாதையாக விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு மத்திய போக்குவரத்து ததுறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகவும்.

ஆனால் தற்போது வரை சாலை விரிவாக்கம் செய்யாமல் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது எனவே மேலும் உயிரிழப்பை தடுக்க உடனடியாக பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் தொப்பூர் நெடுஞ்சாலையை நான்கு வழிப் பாதையில் இருந்து ஆறு வழி பாதையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார. இந்நிலையில் ஒரு பக்கம் எட்டு வழி சாலைக்கு எதிப்பு தெரிவித்துவிட்டு மறுபக்கம் சாலையை விரிவாக்கம் செய்யவேண்டும் என திமுக எம்பியின் கோரிக்கை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.