நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது, இந்நிலையில் அதிமுக தோல்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த தவறான முடிவுகள் தான் என கூறப்படும் நிலையில், திமுகவுக்கு ஆதரவாக சில உள்ளடி வேளைகளில் அவர் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது, எடப்பாடி மற்றும் திமுக இடையே வேட்பாளர் தேர்வில் சில மறைமுக தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வந்தார் நடிகை குஷ்பு, சேப்பாக்கம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்து வந்தனர் பாஜகவினர், அதே சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கான வேலைகளும் நடைபெற்றது, ஆனால் குஷ்பு மீது சேப்பாக்கம் தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனிடையே குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடுமையான போட்டியாக இருப்பார் என்பதால் உதயநிதி போட்டியிடும் தொகுதி உறுதி செய்யாமல் இருந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை திரைமறைவில் தொடர்பு கொண்ட திமுக சேப்பாக்கம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டாம் என பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்பட்டுள்ளார்.
அதே போன்று எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவருக்கு எதிராக டம்மியான வேட்பாளரை நிறுத்தவும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் தெரிவித்துள்ளார் அதற்கேற்றார் போன்று இரண்டு தரப்பில் திரைமறைவு ஒப்பந்தப்படி சேப்பாக்கம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காமல் பாமகவுக்கு ஒதுக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்த குஷ்பூவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, ஆனால் உதயநிதிக்கு எதிராக பாமகவை களம் இறக்கி அவர் எளிதாக வெற்றி பெறவும், அதே போன்று ஒ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக வலுவான வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை இறக்கி கடுமையான இழுபறிக்கு இடையில் ஓபிஎஸ் வெற்றி பெறுவதற்கு திரைமறைவில் எடப்பாடி செய்த உள்ளடி வேலைகள் தான் காரணம் என கூறபடுகிறது.