எடப்பாடி -SP வேலுமணி உச்சக்கட்ட மோதல்.! கொங்கு மண்டலத்தில் இரண்டாக உடையும் அதிமுக.!

0
Follow on Google News

கொங்கு மணடலத்தில் அதிமுக இரண்டு அணியாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது, ஜெயலலிதா மறைவுக்கு பின் ஒபிஎஸ் அணி – இபிஎஸ் அணி என இரண்டாக இருந்த அதிமுக பின் ஒன்றாக இணைந்தது, இதன் பின் அதிமுகவில் மெல்ல அதிகாரம் செலுத்த தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஒரு காரணத்தை கொண்டு ஓபிஎஸ் கை ஓங்கிவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தார், ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு கிடைத்தும் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து தடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் அமைச்சர்கள் யாரும் தன்னை மீறி வளர்ந்து வந்தால் அவர்களை அவ்வப்போது அடக்கி வைத்து வந்துள்ளார், கடந்த வருடம் கொரோனா தொற்று முதல் அலையின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலக்களில் கொரோன தொற்று அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையே இருந்து வந்தது, கொரோன தொற்றின் காரணமாக ஒருவர் கூட மரணம் அடைந்து விட கூடாது என கடுமையாக போராடினர் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.

ஆனால் கொரோன தொற்றினால் ஏற்படும் மரணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை, இருந்து கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு வந்த அமைச்சர் விஜய பாஸ்கர் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது, மேலும் அவருக்கென சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளம் உருவானதை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் அவரை ஓரம் கட்டிவிட்டு சுகாதார துறை செயலாளரை முன்னிறுத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அதிகாரத்துக்கு முக்கிய காரணம் அவர் பின்னால் இருக்கும் கொங்கு மண்டல அதிமுகவினர் தான் என கூறப்பட்டது, இந்நிலையில் அதிமுக அமைச்சர்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் SP வேலுமணி கொங்கு மணடலத்தில் தனக்கென ஒரு ஆதரவாளர்களை ஏற்படுத்தி அதிமுகவில் முதல்வர் பழனிசாமிக்கு சமமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றவர், மற்ற அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்தியது போன்று SP வேலுமணியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஓரம்கட்டிவிட்டு அதிமுவின் அதிகாரமிக்க தலைவராக SP வேலுமணி உருவெடுத்து வருவதாக தகவல் அறிந்தும் தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு பின்பு SP வேலுமணியிடம் இது குறித்து பேசியுள்ளார், ஆனால் மற்ற அமைச்சர்கள் போல் அடங்கி போவதாக இல்லை என்கிற தோரணையில் பேசியுள்ளார் SP வேலுமணி இதனை தொடர்ந்து இருவருக்குமான உரசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் கொங்கு மண்டலத்தில் அதிமுக இரண்டு பிரிவாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.