தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி ஒதுங்கி கொள்ள வேண்டும்.! நான்கு துண்டுகளாக உடையும் அதிமுக.!

0
Follow on Google News

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 2ம் தேதி வர இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது, இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 140 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டுள்ளது, அதிமுக கூட்டணி 70 தொகுதிகள் வரை வெற்றி பெரும் என்றும் குறிப்பாக டெல்டா தென்மாவட்டம், போன்ற பகுதிகளில் அதிமுக பலத்த அடி வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்பு அதிமுக முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வந்ததற்கு ஒ.பன்ணீர் செல்வம் உட்பட முக்கிய அதிமுக தலைவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் எடப்பாடி எடுத்த தவறான முடிவுகளால் திமுக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, அப்படி இருக்கையில் எந்த அர்த்தத்தில் இவர் அதிமுக வெற்றி பெரும் என தெரிவித்து வருகிறார் என தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் படி அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு முழு பொறுப்பேற்று கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலகி கொள்ள வேண்டும் என அதிமுக முக்கிய தலைவர்கள் மத்தியில் இருந்து தற்போது இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரைமறைவு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதனால் தேர்தல் முடிவு வெளியான பின்பு அதிமுக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது வரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ் ஆதரவாளர்கள் என இரண்டு குரூப்கள் இருந்து வருகின்றனர், ஆனால் இதுவரை மறைமுகமாக செயல்பட்டு வந்த அமைச்சர் SP வேலுமணி தலைமையிலான அவருடைய ஆதரவாளர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் என ஒவ்வொரு அணியும் தேர்தலுக்கு பின்பு ஒவ்வொன்றாக வெளிவரும் என் எதிர்ப்பார்க்க படுகிறது.

விஜயபாஸ்கர் – எடப்பாடி பழனிசாமி இடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது, கொங்கு மண்டலத்தில் SP வேலுமணி – எடப்பாடி பழனிசாமி இடையே உள்ள மோதல் சமீப காலமாக உச்சகட்டத்தை அடைந்துள்ளது, இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர்களின் ஆட்டத்தை தொடங்குவார்கள், இதனால் அதிமுக நான்கு துண்டுகளாக உடைய வாய்ப்பு இருப்பதாக வெளிவரும் தகவலுக்கு வாய்ப்பில்லை என்றும் மாறாக தமிழக காங்கிரஸ் கட்சி போன்று இனி அடிக்கடி அதிமுகவில் கோஷ்டி சண்டைகள் நடைபெரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த கோஷ்டிகளுக்கு மத்தியில் சிக்கி தவிப்பதை தவிர்த்து சில முக்கிய அதிமுகவினர் பாஜக அல்லது திமுக பக்கம் படையெடுக்க வாய்ப்புகள் உண்டு என கூறபடுகிறது, இந்நிலையில் எதிர் கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி வருவதர்க்கு ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஒ.பன்னீர் செல்வம் வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவிக்க வாய்ப்புகள் இருப்பதால் இறுதியில் பொதுவான ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக முன்னிறுத்தப்படுவர் என கூறப்படுகிறது.