நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரம் மே 2ம் தேதி வெளிவர இருக்கின்றது, இந்நிலையில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது, ஆனால் அடுத்தது திமுக ஆட்சி தான் என முக ஸ்டாலின் தனக்கு நெருக்கமான அரசு உயர் அதிகாரிகள் மூலம் வந்த தகவல் மற்றும் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட் என மிகுந்த நம்பிக்கையில் அடுத்தகட்ட பணியில் இறங்கியுள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் திமுக மந்திரிசபை அமைக்கும் பணியில் ஈடுபட்ட முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், இறுதியில் அதற்கான பட்டியலையும் தயார் செய்து முடித்துள்ளார், இதனை தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் வேலூர் பகுதியில் நடக்கும் பொது பணித்துறை தொடர்பான காண்ட்ராக்டர் பெரும்பாலும் திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன் இருவருக்கும் திரைமறைவு சந்திப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, தலைமை செயலகத்தில் கூட ஸ்டாலினுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து துரை முருகன் பேசிய தகவல் முக ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் கடந்த வருடம் புகார் தெரிவித்தது குறித்து செய்திகள் வெளியானது, இதனை தொடர்ந்து திமுக அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும், துரைமுருகன் மற்றும் எடப்பாடி இடையே பொதுப்பணி துறையில் சில திரைமறைவு வேலை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதை நன்கு அறிந்த முக ஸ்டாலின் , சபாநாயகராக துரைமுருகனை அமர்த்த முடிவு செய்து மந்திரிசபையில் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது, இந்த தகவல் அறிந்த துரைமுருகன் உடனே ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அதற்கு ஸ்டாலின் பல விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொள்ளாத துரைமுருகன் எனக்கு பொதுப்பணித்துறையை ஒதுக்கியே ஆகணும் என கட்டாய படுத்தியதாக கூறபடுகிறது.
இதனால் துரைமுருகனிடம் இருந்து தப்பிக்க முடியாத ஸ்டாலின் பொது பணித்துறையை ஒதுக்குவதாக ஒப்பு கொண்ட பிறகு தான் துரைமுருகன் அமைதியானார் என தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தால் சபாநாயகராக சுப்புலட்சுமி ஜெகதீசனை அமர்த்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது, இது நடந்தால் தமிழக சட்டசபையில் முதல் பெண் சபாநாயகர் என்கிற பெருமையும் திமுகவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.