அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி திமுக இளைஞரணி சார்பில் நடந்த போராட்டம், மற்றும் தற்போது ஆளுநருக்கு எதிராக திமுக நிலைப்பாடு ஆகியவற்றுக்கு பாமக மறைமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தமிழக அரசியல் கூட்டணியில் மற்றம் வராம என்கிற கேள்வி எழுந்துள்ளது, கடந்த 15ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அன்றைய தினம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று திமுக போராட்டம் நடத்துகிறது. சுரப்பா நியமிக்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகம் சீரழியும் என்பதை உணர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2018-லேயே போராட்டம் நடத்திய கட்சி பா.ம.க.அப்போது அதை வேடிக்கை பார்த்த திமுக, அண்ணா பல்கலைக்கழக சீரழிவுகள் தொடங்கி விட்ட நிலையில் இப்போது தான் போராட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலைக்கழக நலனில் இப்போதாவது திமுகவுக்கு அக்கறை வந்ததே… அது வரை சரி தான் என பதிவு செய்திருந்தார்.
தற்போது மருத்துவக்கல்லுரி இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக குரல் கொடுத்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவீட்டர் பக்கத்தில், மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும் இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல…. திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன தான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா?…. ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்!
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” என பேரறிஞர் அண்ணா கூறியதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் சமீப காலமாக திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற திமுக முயற்சி செய்து வரும் நிலையில், பாமக திமுகவுடன் சமீப காலமாக உரசல் போக்கை கைவிட்டு இருப்பது திமுக- பாமக கூட்டணி அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.