கொரோனா தொற்று ஏற்பட்டால் கவலையோ, பீதியோ அடைய வேண்டாம்… இதை செய்தாலே போதும்.!

0
Follow on Google News

லேசான கொவிட்-19 அறிகுறிகளை வீட்டிலிருந்தே சமாளிப்பதற்கான, தகவல்கள் மற்றும் குறிப்புகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், கொவிட் பாதிப்பை பலரால் வீட்டிலிருந்தே சமாளிக்க முடியும் என்பதால், கொவிட்-19 அறிகுறிகள் எதுவும் ஏற்பட்டால் பீதியடைய வேண்டாம் என இந்த குறிப்பு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

கொவிட்- 19 பொதுவான அறிகுறிகளை இது பட்டியலிடுகிறது. முதல் முறையாக அறிகுறிகளை உணரும் போது, மக்கள் தங்களை வீட்டில் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என இது பரிந்துரைக்கிறது. தொற்று ஏற்பட்டால், உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பு சக்தி, பாதிப்பை எதிர்த்து போராடும் என்பதால், மக்கள் கொவிட் தொற்று ஏற்பட்டால் கவலையோ, பீதியோ அடைய வேண்டாம் என இது மக்களை கேட்டுக் கொள்கிறது.

தொற்று ஏற்பட்டால், தனிமைபடுத்திக் கொண்டு ஓய்வுடுப்பது முக்கியம். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து நோயாளின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, வெப்ப நிலை ஆகியவற்றை தவறாமல் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் தொடர்ந்தால், அல்லது ஆக்ஸிஜன் அளவு SpO2, 92 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தால், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் செல்லும் அளவை அதிகரிக்க, குப்புறப்படுக்கும் முறை குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டியதன் முக்கியத்தும் குறித்தும் இந்த குறிப்பு எடுத்துக் கூறுகிறது. தொற்று பரவலை குறைக்க, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த வழிகாட்டி குறிப்பு எடுத்துக் கூறுகிறது. தடுப்பூசி போட்ட பின்பும், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என இது மக்களுக்கு நினைவூட்டுகிறது.