‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் தந்தை SA சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது. அந்தக் கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவா்கள் ஓர் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.இந்த அறிக்கை இயக்குனர் SA சந்திரசேகரை மிகவும் கோவத்தில் ஆழ்த்தியது. புதியதாக அரசியல் கட்சி தொடங்கி வரும் தேர்தலில் பெரும் கட்சிகளுடன் பேரம் பேசி பெரும் தொகையை பெற்று கூட்டணி அமைக்கும் கனவில் இரு SA சந்திரசேகர் கனவில் மண்ணை அள்ளி அமைந்தது விஜயின் இந்த அறிக்கை.
மேலும் விஜய் தூண்டுதலின் பெயரில் அவருடடைய அம்மா சோபா அளித்த பேட்டியில் SA சந்திரசேகருக்கு எதிராக கருத்து தெரிவித்து குடும்ப சண்டை தெருவுக்கு வந்தது, இந்நிலையில் தனக்கு நெருங்கியவர்களிடம் இது குறித்து பேசிய SA சந்திர சேகர், நான் வளர்த்த என் மகன் என்னையவே எதிர்க்கிறார், இருக்கட்டும் இனி அவர் படம் எப்படி வெற்றி பெரும் என்று பார்க்கிறேன், தொடர்ந்து நான்கு படம் தோல்வி அடைந்தால் பின் என்னிடம் வந்து தான் ஆகணும் என SA சந்திரசேகர் கூறிவருகிறாராம்.