சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அந்த படத்தில் வன்னியர்களுக்கு எதிராக சில காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பாமகவை சேர்ந்த அன்புமணி தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். ஆனால் திரௌபதி , ருத்ரதாண்டம் படம் வெளியான போது அன்புமணி எங்கே சென்றார் என சூர்யாவுக்கு ஆதரவாக விடுதலை கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூக வலைதளபக்கத்தில், கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி விஜய் யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது என பதிவு செய்து.
விஜய் என்கிற வலைதளவாசி பதிவை திருமாவளவன் பகிர்ந்துள்ளார். அதில், திரௌபதி படத்தில் ஒரு கேரக்டர் அச்சு அசலாக திருமாவளவன் மாதிரிதான் காட்டி எடுத்து வைத்திருப்பான் படத்தின் இயக்குனர் மோகன், அதைப்பற்றி திருமா விடம் கேட்டபோது அந்த படத்தை நான் பார்க்கவில்லை பார்க்க எனக்கு நேரமும் இல்லை அதைப் பற்றி கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என சொல்லி முடித்துவிட்டார்.
விடுதலை சிறுத்தை கட்சி அதைப்பற்றி பெருசு பண்ணி இருந்தாங்க என்றால், பெரிய சட்ட ஒழுங்கு ஏற்பட்டு சாதி கலவரம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திருமாவளவன் தன் கட்சியினரை அதை எளிதாக கடந்து போக சொல்லிவிட்டார் அதுதான் தலைமை பண்பு, அன்புமணி அப்பாவி வன்னிய இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டிவிடுகிறார் பாவம் அவர்கள் என விஜய் என்கிற வலைதளவாசி பதிவை பகிர்ந்துள்ளார் திருமாவளவன்.
இதற்கு வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள், உங்கள் மீது தப்பு இருந்தால் தானே அமைதியாக இருந்தீர்கள், அடங்க மறு அதுமீறு, சரக்கு மிடுக்கு என்று பேசியதை இல்லை என்று சொல்ல முடியுமா? மேலும் திருமா அமைதியாக போன காரணம் அதில் உண்மைதன்மை இருந்ததால் தான்.. ஆனால் ஜெய்பீம் படத்தில் உண்மையை மறைத்து வேறொரு சமூகத்தின் மீதுள்ள வன்மத்தை கொட்டியிருக்கிறார்கள்.. இரண்டும் வித்தியாசம் உண்டு என திருமாவளவனுக்கு பதிலளித்து வருகின்றனர்.