நாளை காலையில் சன் டிவிக்கு என்ன நடக்கு தெரியுமா.? அண்ணாமலை பகீர் பேட்டி…. பீதியில் சன் குழுமம்…

0
Follow on Google News

செய்தியாளர் சந்திப்பின் போது திமுக மற்றும் தயாநிதிமாறன் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தது குறித்து எடக்கு முடக்கா கேள்வி கேட்ட சன் டிவி பத்திர்கைளரை பதில் பேச முடியாதவாறு பதில் அளித்தார் அண்ணாமலை, அவர் பேசியதாவது. ஒரு குடும்பத்தின் சார்பில் நீங்க கேள்வி கேட்கிறேன் என்று சொல்லுங்கள், சன்டிவி பத்திரிகையாளர் என்று கூறவேண்டாம். ஒரு குடும்பத்தின் சார்பில் கேள்வி கேட்கிறேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விடுங்கள்.

ஒரு குடும்பத்தைப் பற்றி பேசும் போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. சன்டிவி பத்திரிக்கையாளர் அந்த குடும்பத்தின் உறுப்பினரா, நாங்கள் என்ன தவறு செய்தோம், மக்களின் குறைகளை அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியிடம் கேள்வி கேட்கவேண்டும், நாங்கள் யாராவது ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை பார்த்தோமா. கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது, திமுக எம்பி தயாநிதி மாறன் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்தார்.

இதனிடையே சன் டிவி பத்திரிகையாளர், பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அடுத்த முறை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியவர் அதிமுக இரட்டை தலைமையின் காரணமாக அந்த கட்சி மிகப்பெரிய சரிவை சந்திக்கும் அதை பயன்படுத்தி பாஜக திமுகவுக்கு எதிராக தன்னை முன்னிறுத்தி அதிமுகவை புறம் தள்ளிவிட்டு செயல்படுமா என் சன் டிவி பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை.

நான் ஜோசியம் பார்க்கும் வேலை செய்கிறவன் இல்லை, ஒரு அரசியல் கட்சியின் தலைவன். அதனால் இது நடக்குமா அது நடக்குமா, இப்படியா, அப்படியா என்று யூகிக்க பதில் தரமுடியாது , இப்ப நீங்களும் நானும் இங்கே இருக்கின்றோம், நீங்கள் எழுதிக் கொடுத்து உத்தரவாதம் தாருங்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே எதுவும் நடக்காது, இங்கே பூகம்பம் வந்து இந்த கட்டடம் இடிந்து உங்கள் தலையில் விழாது என்று உத்தரவாதம் தாருங்கள்.

நம்ம எதையும் யூகிக்க முடியாது, அரசியல் தலைவராக எனக்கு இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்பது எனக்கு கொடுத்த வேலை. ஏற்கனவே நாங்கள் சொல்லிவிட்டோம் பாஜக அதிமுக வேறு, எங்களுக்கும் அவர்களுக்கும் தத்துவம் ஒரே போன்று இருப்பதால் நாங்கள் கூட்டணியில் இருக்கின்றோம், ஒரே கட்சியாக இருந்தால் நாங்கள் அதிமுகவில் இணைந்து விடுவோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒன்றாக இருக்கின்றோம்.

அப்படி இருக்கும்போது எங்கள் கட்சியை வளர்ப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். நாளை காலையில் சன் டிவிக்கு என்ன நடக்கும் என்று தெரியாது, மக்கள் டிவி பார்ப்பார்களா டிஆர்பி நல்லா போகுமா என தெரியாத விஷயத்தை பற்றி நான் பதில் தர முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தயாநிதிமாறன் தொழில் ரகசியங்கள் வெளியில் வரும் என அண்ணாமலை எச்சரித்த நிலையில் தற்போது சன் டிவிக்கு என்ன நடக்கும் என அண்ணாமலை பேசியிருப்பது சன் டிவி குழுமத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறபடுகிறது.