கடந்த 2020 தொடக்கத்தில் இந்தியாவில் ஊடுருவிய கொரோனா வைரஸ், நாடு முழுவதும் பரவியதை தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இந்த கொரோனாவின் கோர தாண்டவம் பல உயிர்களை காவு வாங்கியது, கொரோனா தொற்றின் முதல் அலை உலகம் முழுவதும் சுற்றி ஓய்ந்த நிலையில், தற்போது இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னேற்றம் அடைவதற்கான காரணத்தை பிரபல மருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா விளக்கம் கொடுத்துள்ளார், அவர் தெரிவித்ததாவது, கோவிட் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறனுக்கு சான்றாக, திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. துரை முருகன் அவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருந்தார்.
83 வயதான அவருக்கு தொற்று ஏற்பட்டது அனைவரது கவனத்தையும் கோரியது. ஆயினும் அவர் பெற்றுக்கொண்ட இரண்டு தடுப்பூசிகளின் பலனால் தீவிர நோய்க்கு ஆட்படாமல் நல்ல நிலையில் முன்னேறி வருகிறார் இதய நோய்க்கான பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடதுதக்கத்து இதை தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறனாகவே பார்க்க முடிகின்றது தடுப்பூசிகள் தீவிர நோயை தடுக்கின்றன.
மக்களே. விரைந்து தடுப்பூசியைப் பெறுங்கள் ,சென்ற வருடம் உடல் பருமன் பல இணை நோய்கள் கொண்ட
பாடும் நிலா எஸ்.பி.பால சுப்பிரமணியத்தை கொரோனாவுக்கு இழந்தோம் ஒருவேளை தடுப்பூசிகள் இருந்திருந்தால் அவரும் இன்று நம்முடன் இருந்திருக்கலாம். 60+ வயதுடைய முதியோரே 45+ வயதுடையோரே
விரைந்து வந்து கொரோனா தடுப்பூசியை எடுங்கள், உங்கள் வயதினிரிடையே தான் முதல் அலையில் 88% மரணங்கள் பதிவாகின கொரோனா தடுப்பூசிகளைப் பெற்று தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் என சிவகங்கையை சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.