பாஜகவில் எந்த ஒரு பொறுப்பில் இல்லாத நடிகர் SV சேகர் தொடர்ந்து அந்த கட்சியை சிக்கலில் சிக்க வைத்து வருகிறார், இது அந்த கட்சி தலைமைக்கு கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் SV சேகர் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் பாஜகவின் கருத்து போன்று எதிர் கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதும், இதை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திகைத்து போய் நிற்கின்றனர் தமிழக பாஜக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை.
கடந்த இரண்டு வருடத்துக்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்திருந்த சமூக தள பதிவை SV சேகர் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது, இந்த சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்தாலும் எதிர்கட்சிகளும் சம்பந்தப்பட்டவர்களும் விடுவதாக இல்லை, இதை பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து தற்போது வரை தொடர்கின்றனர், மேலும் சம்பத்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் SV சேகர் வீட்டை கல்வீசி தாக்கும் சம்பவம் கூட அரங்கேறியது.
இதன் பின்பு அப்போது இருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், கட்சி ரீதியான எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்றும் அவருக்கு எந்தவித பொறுப்போ, பணிகளோ இனி தரமாட்டோம் என்றும், பெண்களை இழிவுபடுத்தியது யாராக இருந்தாலும் தவறுதான் என்று கூறிய அவர், சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவிட்திருந்தார்.
இதன் பின்பு தற்போது வரை SV சேகருக்கு கட்சியில் எந்த ஒரு பதவியும் கொடுக்கப்படாமல், மேலும் அவர் எந்த ஒரு பாஜக கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் இருந்து வருகிறார், சமீபத்தில் திமுக ஆட்சியை வெகுவாக சமூக வலைதளத்தில் SV சேகர் பாராட்டியது , பாஜக தொண்டர்களை கடும் கோவத்தை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து தற்போது சமூக வலைதள கலைந்தாவில் ஒன்றில் பேசியவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தலா 13 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் SV சேகர் தெரிவித்த இந்த கருத்து பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்துள்ளது, இந்நிலையில் தனக்கு கட்சியில் எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கப்படாததால் தொடர்ந்து கட்சியின் தலைமையை சிக்கலில் சிக்க வைத்து வருகிறார் SV சேகர் என்றும், இவர் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்றும் பாஜகவினர் அவருக்கு எதிராக கடுமையாக சாடி வருகின்றனர். இவர் அதிமுகவில் இருந்த போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், அங்கு இருந்து வெளியேற்றப் பட்டார் என்பது குறிப்பிடதக்கது.