திருப்பரங்குன்றம் கோவில் அருகில் மேடை அமைத்து இந்துக்களை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.! கடும் கொந்தளிப்பில் இந்துக்கள்.!

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் கோவில் அருகில் உள்ள திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகில் SDPI கட்சியினர் நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக பேச்சாளர் ஜீவா, இந்து மனு தர்மம் குறித்து ஆபாசமாகவும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அப்பகுதியில் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் குறிப்பாக முருக பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் கந்தசஷ்டி கவசம் இழிவு படுத்திய சம்பவம் முருக பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மேலும் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார், இவர் திமுக ஐடி பிரிவில் வேலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த SDPI என்கிற இஸ்லாமிய அமைப்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக பேச்சாளர் ஜீவா, மனுஸ்மிருதியில் இந்துக்களை விபசாரி என்று குறிப்பிட்டுள்ளதாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இது போன்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக பேச்சாளர் பேசியிருப்பது மீணடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலாமியர்கள் மத்தியில் பேசிய திமுக பேச்சாளர் ஜீவா, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய வரலாறு கிடையாது என்றும், மலை உச்சியில் இருக்கும் காத்திகை தீபம் ஏற்றப்படும் தூண் என சொல்லப்படும் தூண், அது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட தூண் கிடையாது என ஆதாரமற்ற ஒரு வரலாற்றை பேசியது முருக பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்துக்கள் மனம் புன்படியும், மத கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய திமுக பேச்சாளர் ஜீவாவை கைது செய்ய வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர், மேலும் திமுக பேச்சாளர் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் கறுப்பர் கூட்டம் விவகாரம் போன்று, இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.