பாஜகவிடம் சரண்டராக திமுக தயார்… விரட்டி அடிக்கும் டெல்லி பாஜக தலைமை..! திமுக கணக்கு பலிக்குமா?

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல், அதற்கு முன் நடந்த 2019 நாடளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது திமுக, தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, பாஜகவுக்கு அடிமை அதிமுக என்கிற ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டியமைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது திமுக. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியமால், ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, கனிமொழி மற்றும் ஆ.ராஜா மீது நிலுவையில் உள்ள 2ஜி வழக்கு, செந்தில் பாலாஜி மீது உள்ள ஊழல் வழக்கு, திமுக எம்பி ஜெகத்ரக்ஷன் மீது உள்ள அமலாக்கத்துறை விசாரணை என மத்திய அரசின் நேரடி பார்வையில் இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் மீது எந்த நேரம் வேண்டுமானாலும் மத்திய அரசு அதிரடியை கட்டலாம் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது புதியதாக ஆட்சிக்கு வந்த திமுக ஆரம்பத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் சமீப காலமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை குறைத்து கொண்டது. இதற்கு காரணம் மத்திய பாஜக அரசு துணை இல்லாமல் தமிழக அரசை நடத்துவது பெரும் சிரமம் என திமுக அரசு உணர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு தான் தமிழக படஜெட் தாக்கல் செய்வதில் கூட தாமதம் என கூறபடுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் பல வழக்குகளில் சிக்க்கியுள்ள தனது சகாக்களை காப்பாற்ற, மேலும் தொடர்ந்து தமிழக அரசை வழிநடத்த மத்திய அரசின் முழு ஒத்துழைப்பை வழங்கிட, மத்திய பாஜக அரசிடம் நெருக்கம் காட்ட திமுக தொடங்கியுள்ளதாக கூறபடுகிறது. மாநில சுயாட்சி என்பது மேடை பேச்சுக்கு அழகாக இருக்கும், ஆனால் மதியரசின் உதவி இல்லாமல் சுயாட்சி தத்துவத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்துள்ள திமுக தலைமை.

சமீபத்தில் சட்டசபை நூற்றாண்டு விழாவுக்காக ஜனதிபதியை சிறப்பு விருத்தினராக அழைக்க டெல்லி சென்றபோது, பாஜகவுடன் திமுக நெருங்கி வருவதற்க்கு விருப்பம் தெரிவித்து டெல்லி பாஜக தலைமைக்கு தகவல் அனுப்பியதாக கூறபடுகிறது. ஆனால் பாஜக டெல்லி தலைமை தமிழகத்தில் திமுகவை கடினமாக எதிர்ப்பதின் மூலம் தான் அங்கே கட்சியை வளர்க்க முடியும் என உறுதியாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திமுக போட்ட கணக்கு தோல்வியில் முடிந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.