கழட்டி விட்ட திமுக …கதறி அழும் பிரசன்னா.! இப்ப என்ன செய்கிறார் தமிழன் பிரசன்னா தெரியுமா.?கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன…

0
Follow on Google News

தமிழன் பிரசன்னா குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபர். திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொது அதன் செய்தி தொடர்பாளராக இருந்த பிரசன்னா எதிர் மறை விமர்சனம் மூலம் மிக விரைவில் பிரபலமானார். இந்துக்கள் வழிபடும் கடவுள்களை இழிவாக பேசி இந்துக்கள் கடும் எதிர்ப்பின் காரணமாகவும், பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக பேசி பாஜகவினர் எதிர்ப்பின் காரணமாக, இது போன்று எதிர் மறை விமர்சனங்கள் மூலம் பிரபலமாக தொடங்கினர் பிரசன்னா.

பிரசன்னா பிரதமர் மோடி குறித்து பேசியதில், அனைத்து குடிமகன்கள் தூக்கு கயிற்றுடன் காத்திருக்கின்றனர். வாருங்கள் எங்கள் கண்முன்னே நீங்கள் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்டு களிக்க இருக்கிறோம்’’என தமிழன் பிரசன்னா பிரதமருக்கு எதிராக பகிரங்கமாக வீடியோ வெளியிட்டிருந்தது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அதே போன்று பிரதமர் மோடி அயோக்கியன் மற்றும் ஒருமையில் பேசி, இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்ட்டிருந்தது,

மேலும் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்த சர்ச்சையில் சிக்கிய போது தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு குரல் ஒலித்து கொண்டிருந்த கால கட்டத்தில், திமுக தலைமையே அமைதியாக இருந்த கால கட்டத்தில், வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரசன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் பெரியாழ்வார்க்கு தான் ஆண்டாள் பிறந்தார் என்பதற்கு H.ராஜா எங்கேதும் விளக்கை மாட்டி வைத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாரா என பேசிய பிரசன்னா வீடியோவுக்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஒரு கட்டத்தில் தனது எதிர்மறை பிரச்சாரம் மூலம் திமுக மேடைகளில் பேச வாய்ப்புகளை பெற்று தமிழகம் முழுவதும் பேசி வந்தார், ஆனால் நாளுக்கு நாள் பிரசன்னாவுக்கு எதிர்ப்பாளர்கள் அதிகரிக்க. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக தலைமையிடம் பிரசன்னா பிரச்சாரம் செய்தால் விழும் ஓட்டுகள் கூட விழாது என தெரிவிக்க 2019 தேர்தலில் தலைகாட்ட கூடாது என திமுக தலைமை உத்தரவை ஏற்று வீட்டில் முடங்கினார் பிரசன்னா.

இந்நிலையில் பிரசன்னா ஒரு கட்டத்தில் திமுக தலைமையினால் ஓரம் கட்டப்பட்டாலும், இந்துக்களுக்கு எதிராகவும், இது கடவுள்களை இழிவாக பேசிய பழைய வீடியோங்களை பாஜகவினர் சமூக வலைதளத்தில் வைரல் செய்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது திமுக தலைமைக்கு பிரசன்னா மீது கோபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் முடியும் வரை சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவோ அல்லது மைக்கை பிடிக்கவே கூடாது என பிரசன்னாவுக்கு திமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி அமைத்த சில மாதங்களில் பிரசன்னா இரண்டாவது மனைவி வீட்டில் இருந்த நிலையில் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.இது மேலும் பிரசன்னாவுக்கு அவப்பெயரை பெற்று தர,அத்துடன் தமிழக அரசியலில் இருந்து காணாமல் போனார் பிரசன்னா. திமுக தலைமையும் பிரசன்னாவை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இனி பிரசன்னா திமுகவில் இருந்தால் அது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் திமுக பிரசன்னாவை கழட்டி விட்ட நிலையில், தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது அரசியல் வாழ்க்கை முடிஞ்சு போச்சு என்றும், தன்னனுடைய இடத்தை நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த ராஜிவ் காந்தி கைப்பற்றி விட்டார் என கதறி அழும் பிரசன்னாவுக்கு, கட்சியில் இருக்கும் உன்னுடைய பழக்கத்தை வைத்து வக்கீல் தொழிலில் கவனம் செலுத்து என நெருக்கமானவர்கள் அறிவுறுத்தி வருவதால், இனி வரும் காலங்களில் தனது வக்கீல் தொழில் பிரசன்னா கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.