நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும் என்பதை பொறுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசியல் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது, கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது, நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் போன்று 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று விடுவோம் என நம்பிக்கையில் இருந்தது திமுக தலைமை.
இதனையெடுத்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என தேர்தல் முடிந்த அன்று ஸ்டாலினுக்கு வந்த தகவலை தொடர்ந்து அடுத்தது திமுக ஆட்சி அமைப்பதற்கான வேளைகளில் தீவிரம் காட்டினார் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆனால் தேர்தல் முடிந்த ஒரு வாரம் கழித்து உளவு துறையின் தீவிர ஆய்வுக்கு பின் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக உளவு துறை ரிப்போர்ட் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றுள்ளது.
இதனால் கடும் அப்செட் ஆனா ஸ்டாலின் சோகத்தில் மூழ்கினர், இதனை தொடர்ந்து ஸ்டாலின் ரிலாக்ஸ் ஆவதற்காக அவரது குடும்பத்தினர் அவரை கொடைக்கானல் அழைத்து சென்றுள்ளார்கள். இந்நிலையில் ஸ்டாலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் முடிவுகளை பொறுத்து சில அரசியல் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கொடைக்கானலில் முக ஸ்டாலின் குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் திமுக வெற்றி பெற்றால் முக ஸ்டாலின் முதல்வராக இருப்பர் என்றும், தற்போது உளவு துறை தகவல் போன்று அதிமுக ஆட்சி அமைந்தால் முக ஸ்டாலின் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, அவருடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது என ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில், உதயநிதி எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தால் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என ஸ்டாலின் குடும்பத்தினர் எண்ணுவதாக கூறப்படுகிறது.
அதனால் உதயநிதியை திமுக செயல் தலைவராக நியமித்து கட்சி தொடர்பான அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும், அதே போன்று தற்போது திமுகவில் இருக்கும் மூத்த தலைவர் இருப்பவர் துரைமுருகன், ஆனால் அவரின் உடல்நிலை காரணமாக எதிர்க்கட்சி தலைவராக துடிப்பாக செயல்பட முடியாது என்பதால் ஸ்டாலின் குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வரும் ஏ.வ.வேலுவை எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர வைக்க ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.