ஆ.ராசாவா? இல்லை ஆபாச ராசாவா? பெண்களை இழிவாக பேசியதற்கு கனிமொழி கண்டனம்.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது, தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களும், சில விரும்பத்தக்காதா நிகழ்வுகளும் நடந்து வருகிறது, சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இரண்டாவது மகள் எங்க அப்பா என்று சொல்வதை விட அவர் உங்க விட்டு பிள்ளை, அவர் உங்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ளார் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதே போன்று திமுக பிரச்சாரங்களில், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, மற்றும் திமுக எம்பி, ஆ ராசா ஆகியோர் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, திண்டுக்கல் லியோனி பெண்கள் கூடியிருந்த கூட்டத்தின் மத்தியில் பெண்களின் இடுப்பு பற்றி பேசியது அங்கே இருந்த பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது, அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி திமுக எதிராக கண்டனங்கள் பதிவானது.

அதே போன்று திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, கடந்த ஒரு வருடமாக பத்திரிகைகளுக்கு அதிமுக கொடுத்த விளம்பரம் மூலம், எடப்பாடி பழனிசாமி சிறந்த தலைவர் போன்று அவரால் லாபத்தை எட்டியுள்ள பத்திரிகைகள் சித்தரிக்கிறது, ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது, என்ன தியாகம், அவர் பொது வாழ்க்கையில் எட்டியுள்ள தொலைவு என்ன இருக்கிறது ஒன்றும் கிடையாது.

மேலும் நல்ல உறவில் ஆரோக்கியமாக சுக பிரசவத்தில் பிறந்தவர் தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என ஆ.ராசா பேசியிருப்பது, பெரும் சச்சையாக வெடித்துள்ளது, எடப்பாடி பழனிசாமி தாயாரை ஆ.ராசா இழிவாக பேசிவிட்டதாக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது, இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக தனது டீவீட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என தெரிவித்துள்ளார், இதற்கு சமூக வலைதளவாசிகள், ஆ ராசா என்பதற்கு பதில் ஆபாச ராஜா என்று பெயர் வைத்திருக்கலாம் என கனிமொழி பதிவுக்கு பதில் கருத்து தெரிவித்து வருகின்றன.