“செப்டம்பர் 20 ஆம் தேதி, காடாம்புலியூர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்த கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் தன் தந்தையை எம்பி ரமேஷ் உள்ளிட்டவர்கள் தாக்கி கொலை செய்துவிட்டார்கள் என்று புகார் கொடுத்தார்.இதற்கிடையே பாமக ப வழக்கறிஞர் கே பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். .
இந்நிலையில், கோவிந்தராஜ் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த நிலையில் ADSP கோமதி தலைமையில் சிபிசிஐடி கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி விசாரணை தொடங்கியது. கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா உடன் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி முதல்கட்ட விசாரணையைத் துவக்கினார்கள். இதில் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் சம்பவம் வெளியாகியுள்ளது.
விசாரணையில், சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சில தொழிலாளிகள் கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று சண்முகம், சுந்தர் உள்ளிட்ட தொழிலாளர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில்.
திமுக எம்பி ரமேஷ் மற்றும் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது. இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகி உள்ள எம்பி ரமேஷை போலீசார் தேடி வருகிறார்கள்.இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும் சம்பவத்தை திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை திமுக கையாண்டு வருவதாக கூறபடுகிறது.
அதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யு டுயூபர் துரைமுருகனை எதாவது ஒரு வழக்கு பதிவு செய்து கைது செய்து ஊடகத்தின் பார்வையை துரைமுருகன் பக்கம் திருப்பும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக கூறபடுகிறது. அதன் தொடர்ச்சியாக திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் TRB ராஜா ஆகியோர் துரைமுருகன் கைது செய்ய வேண்டும் என பொங்கி எழுந்து வருவது குறிப்பிட தக்கது.